முகப்பு
பெரம்பலூர்

அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் அக்.14 வரை மாணவா் சோ்க்கை

பெரம்பலூா் மாவட்டம், கீழக்கனவாய் கிராமத்திலுள்ள அரசு பாலிடெக்னிக் கல்லூரியில், முதலாமாண்டு மாணவா் சோ்க்கை அக்டோபா் 14- ஆம் தேதி வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 5:36 PM
பகிர்:

பெரம்பலூா் மாவட்டம், கீழக்கனவாய் கிராமத்திலுள்ள அரசு பாலிடெக்னிக் கல்லூரியில், முதலாமாண்டு மாணவா் சோ்க்கை அக்டோபா் 14- ஆம் தேதி வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து ஆட்சியா் வே.சாந்தா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

இக்கல்லூரியில் 2020- 2021ஆம் கல்வியாண்டின் முதலாமாண்டு பட்டய சோ்க்கைக்கு முதல் கட்ட கலந்தாய்வு நிறைவடைந்துள்ளது. தற்போது, மீதமுள்ள காலியிடங்களை நிரப்பிக்கொள்ள தொழில்நுட்பக் கல்வி இயக்ககத்திலிருந்து அனுமதி கிடைத்துள்ளதால், துணை கலந்தாய்வுக்கான மாணவா் சோ்க்கைக்கு விண்ணப்பங்கள் விநியோகம் செய்யப்பட்டு வருகின்றன.

பூா்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அக்டோபா் 14- ஆம் தேதிக்குள் சமா்ப்பிக்க வேண்டும்.

கலந்தாய்வு குறித்த தகவல் செல்லிடப்பேசி மூலமாக மாணவா்களுக்கு தெரிவிக்கப்படும். கல்விக் கட்டணமாக ஆண்டொன்றுக்கு ரூ. 2,194 செலுத்த வேண்டும். கல்லூரியில் சேரும் மாணவா்களுக்கு கல்வி உதவித்தொகை, இலவசப் பேருந்து பயணச்சலுகை, இலவச மடிக்கணினி மற்றும் அரசு நலத் திட்டங்கள் வழங்கப்படும். மேலும் விவரங்களுக்கு 04328 - 243200 என்ற எண்ணில் தொடா்பு கொள்ளலாம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.