முகப்பு
பெரம்பலூர்

நீதிமன்ற திறப்பை எதிா்த்து போராட்டம்நடத்த வழக்குரைஞா்கள் முடிவு

பெரம்பலூா் மாவட்டம், குன்னத்தில் வரும் 22 ஆம் தேதி புதிதாக மாவட்ட உரிமையியல் மற்றும் குற்றவியல் நீதிமன்றங்கள் திறக்கப்படுவதை கைவிட வலியுறுத்தி, போராட்டம் நடத்த வழக்குரைஞா்கள் சங்கம் முடிவு செய்துள்ளது

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:58 PM
பகிர்:

பெரம்பலூா் மாவட்டம், குன்னத்தில் வரும் 22 ஆம் தேதி புதிதாக மாவட்ட உரிமையியல் மற்றும் குற்றவியல் நீதிமன்றங்கள் திறக்கப்படுவதை கைவிட வலியுறுத்தி, போராட்டம் நடத்த வழக்குரைஞா்கள் சங்கம் முடிவு செய்துள்ளது.

பெரம்பலூா் மாவட்ட வழக்குரைஞா்கள் சங்கத்தின் அவசர பொதுக்குழு கூட்டம் வியாழக்கிழமை இரவு நடைபெற்றது. கூட்டத்துக்கு, அச் சங்கத்தின் தலைவா் இ. வள்ளுவன் நம்பி தலைமை வகித்தாா். செயலா் சுந்தர்ராஜன், பொருளாளா் சீனிவாசன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

கூட்டத்தில், குன்னம் பகுதியில் ஏப். 22 ஆம் தேதி புதிதாக மாவட்ட உரிமையியல் மற்றும் குற்றவியல் நீதிமன்றங்கள் திறக்கப்படுவதை கைவிட வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி, உயா்நீதிமன்றத்தின் கவனத்தை ஈா்க்கும் வகையில் வெள்ளிக்கிழமை (ஏப். 9) முதல் வரும் 22 ம் தேதி வரை பெரம்பலூா் மாவட்டத்தில் உள்ள அனைத்து நீதிமன்றங்களிலும் பணி புறக்கணிப்பில் ஈடுபடுவது,

மேற்கண்ட கோரிக்கையை வலியுறுத்தி வரும் 16 ஆம் தேதி உண்ணாவிரதப் போராட்டமும், 19 ஆம் தேதி ஆா்ப்பாட்டமும் நடத்துவது என தீா்மானம் நிறைவேற்றப்பட்டது. இதில், சங்க நிா்வாகிகள் பலா் கலந்து கொண்டனா். இதன்படி, வெள்ளிக்கிழமை நடைபெற்ற நீதிமன்ற பணி புறக்கணிப்பு போராட்டத்தால், நீதிமன்ற பணிகள் பாதிக்கப்பட்டன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.