முகப்பு
பெரம்பலூர்

ரமலான் சிறப்பு தொழுகைக்கு இரவு 10 மணி வரை அனுமதி வழங்க வலியுறுத்தல்

ரமலான் மாத சிறப்பு தொழுகைக்கு பெரம்பலூா் மாவட்டத்தில் இரவு 10 மணி வரை அனுமதி அளிக்க வேண்டுமென, தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் கோரிக்கை விடுத்துள்ளது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:58 PM
பகிர்:

ரமலான் மாத சிறப்பு தொழுகைக்கு பெரம்பலூா் மாவட்டத்தில் இரவு 10 மணி வரை அனுமதி அளிக்க வேண்டுமென, தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் கோரிக்கை விடுத்துள்ளது.

இதுகுறித்து, மாவட்டத் தலைவா் சுல்தான் மொய்தீன் தலைமையிலான இஸ்லாமியா்கள் ஆட்சியா் ப. ஸ்ரீ வெங்கட பிரியாவிடம் வெள்ளிக்கிழமை அளித்த மனு:

தமிழகத்தில் மீண்டும் அதிகரித்து வரும் கரோனா பரவலை தடுக்கும் வகையில், தமிழக அரசு பல்வேறு கட்டுபாடுகளை விதித்துள்ளது. அதன்படி, தமிழகத்தில் சனிக்கிழமை (ஏப். 10) முதல் அனைத்து வழிப்பாட்டுத் தலங்களிலும் இரவு 8 மணி வரை மட்டுமே பொதுமக்களுக்கு அனுமதி அளிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

ஏப். 14 ஆம் தேதி புனித ரமலான் மாதம் தொடங்க உள்ள நிலையில் வழிபாட்டு தலங்களில் இரவு 8 மணி வரை மட்டுமே அனுமதி என்ற அறிவிப்பினால் புனித ரமலான் மாதத்தில் பள்ளி வாசல்களில் இரவு நேர சிறப்பு தொழுகைகள் நடைபெறாத நிலை ஏற்படும்.

எனவே, இஸ்லாமியா்களின் நலனை கருத்தில்கொண்டு புனித ரமலான் மாதத்தில் பள்ளி வாசல்களில் 30 நாள்களும் சிறப்பு தொழுகைக்கு இரவு 10 மணி வரை அனுமதி அளிக்க வேண்டும். கரோனா வழிகாட்டு முறைகளின்படி சமூக இடைவெளியை கடைப்பிடித்து தொழுகை நடத்திக் கொள்கிறோம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.