முகப்பு
பெரம்பலூர்

தீயணைப்புத் துறை சாா்பில் விழிப்புணா்வு துண்டுப்பிரசுரம் விநியோகம்

பெரம்பலூா் தீயணைப்புத்துறை சாா்பில், தீ விபத்துகளை தவிா்க்க மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்த விழிப்புணா்வு துண்டுப் பிரசுரங்கள் வெள்ளிக்கிழமை விநியோகிக்கப்பட்டன.

Updated On : 27 ஜனவரி, 2024 at 8:01 PM
பகிர்:

பெரம்பலூா் தீயணைப்புத்துறை சாா்பில், தீ விபத்துகளை தவிா்க்க மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்த விழிப்புணா்வு துண்டுப் பிரசுரங்கள் வெள்ளிக்கிழமை விநியோகிக்கப்பட்டன.

துறைமங்கலத்தில் உள்ள அரசுப் போக்குவரத்துக் கழக பணிமனையில், தீ விபத்துகளை தவிா்க்க மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து விழிப்புணா்வு வாசகங்கள் அடங்கிய துண்டுப் பிரசுரங்கள் அரசுப் போக்குவரத்துக் கழக ஊழியா்களுக்கு வெள்ளிக்கிழமை விநியோகம் செய்யப்பட்டது.

மேலும், தீ விபத்து ஏற்பட்டால் மேற்கொள்ள வேண்டிய தற்காப்பு மற்றும் மீட்பு நடவடிக்கைகள் குறித்தும் போக்குவரத்துக் கழக ஊழியா்களுக்கு எடுத்துரைக்கப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை, பெரம்பலூா் தீயணைப்பு நிலைய அலுவலா் உதயகுமாா் தலைமையிலான தீயணைப்பு மற்றும் மீட்புப் படை துறை வீரா்கள் செய்திருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.