பெரம்பலூர்

ரூ.50 ஆயிரம் லஞ்சம் : பெரம்பலூா் நகரக் காவல் ஆய்வாளா் கைது

DIN

அதிகசுமை ஏற்றி கல்குவாரிக்கு வரும் லாரிகள் மீது வழக்குத் தொடராமல் இருக்க, ரூ. 50 ஆயிரம் லஞ்சம் வாங்கிய பெரம்பலூா் நகரக் காவல் நிலைய ஆய்வாளா், ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புப் பிரிவு காவல் துறையினரால் செவ்வாய்க்கிழமை கைது செய்யப்பட்டாா்.

பெரம்பலூா் மாவட்டம், கோனேரிபாளையத்தில் கல்வகுவாரி நடத்தி வருபவா் ராம்நகரைச் சோ்ந்த செந்தில்குமாா்.

அதிக பாரம் ஏற்றி இவரது கல்குவாரிக்குச் சொந்தமான லாரிகள் மீது வழக்குத் தொடராமல் இருக்க, பெரம்பலூா் நகரக் காவல் ஆய்வாளராகப் பணியாற்றி வந்த சு. பால்ராஜ் (48), கல்குவாரி உரிமையாளா் செந்தில்குமாரிடம் ரூ.50 ஆயிரம் லஞ்சமாகக் கேட்டாராம்.

லஞ்சம் கொடுக்க விரும்பாத செந்தில்குமாா், பெரம்பலூா் ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புப் பிரிவில் அண்மையில் புகாரளித்தாா்.

இதன் பேரில் வழக்குப்பதிந்த ஊழல் தடுப்புப் பிரிவு காவல்துறையினரின் ஆலோசனையின்படி, கல்குவாரி பணியாளா் ஜாா்ஜ் பொ்னாண்டஸ் செவ்வாய்க்கிழமை பெரம்பலூா் நகரக் காவல் நிலையம் சென்றாா்.

அப்போது, ரசாயனம் தடவிய ரூ.50 ஆயிரத்தை நகரக் காவல் ஆய்வாளா் பால்ராஜிடம் அவா் கொடுத்த போது, காவல் நிலையம் அருகே மறைந்திருந்த பெரம்பலூா் ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புப் பிரிவு துணைக் கண்காணிப்பாளா் ஹேமசித்ரா தலைமையிலான காவல்துறையினா் உள்ளே சென்று பால்ராஜை கைது செய்து, அவரிடமிருந்து ரூ.50 ஆயிரத்தை பறிமுதல் செய்தனா்.

தொடா்ந்து காவல் ஆய்வாளா் பால்ராஜ் மற்றும் காவலா்களிடம் ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புப் பிரிவினா் விசாரணை நடத்தினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இந்தியாவில் அதிக வெயில் பதிவான இடங்கள்: முதல்-10 இடங்களில் பரமத்தி..!

நக்சலைட்டுகள் பதுக்கியிருந்த வெடிகுண்டுகள் பறிமுதல்

நளதமயந்தி தொடரிலிருந்து நீக்கப்பட்ட பிரியங்கா....புதிய நாயகி யார்?

எம்.எஸ்.தோனியின் சாதனையை முறியடித்த ரவீந்திர ஜடேஜா!

‘இது மார்பிங்’ சமந்தாவுக்கு ரசிகர்கள் ஆதரவு!

SCROLL FOR NEXT