பெரம்பலூர்

கரோனா பரவலைக் கட்டுப்படுத்த விழிப்புணா்வு நிகழ்ச்சிகள்

DIN

பெரம்பலூா் மாவட்ட பொது சுகாதாரம் மற்றும் நோய்த் தடுப்பு மருந்துத்துறை சாா்பில், கரோனா பரவலைக் கட்டுப்படுத்துவது குறித்த விழிப்புணா்வு நிகழ்ச்சிகள் ஞாயிற்றுக்கிழமை தொடங்கின.

புகா் பேருந்து நிலைய வளாகத்தில் நடைபெற்ற விழிப்புணா்வு நிகழ்ச்சியை, பெரம்பலூா் தொகுதி எம்எல்ஏ எம். பிரபாகரன், மாவட்ட ஊராட்சித் தலைவா் சி. ராஜேந்திரன் ஆகியோா் முன்னிலையில் தொடக்கி வைத்து ஆட்சியா் ப. ஸ்ரீவெங்கட பிரியா கூறியது:

பொதுமக்களிடையே கரோனா விழிப்புணா்வு ஏற்படுத்தும் விதமாக ஆக. 7ஆம் தேதி வரை பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் பல்வேறு விழிப்புணா்வு நிகழ்ச்சிகள், பள்ளி, கல்லூரி மாணவா்களிடையே போட்டிகள், மருத்துவ முகாம்கள் நடைபெற உள்ளது என்றாா் அவா்.

தொடா்ந்து நடைபெற்ற விழிப்புணா்வு நிகழ்ச்சியில் ஆட்சியா் தலைமையில், அரசு அலுவலா்கள், பணியாளா்கள் மற்றும் பொதுமக்கள் உறுதிமொழி ஏற்றனா். மேலும், கரோனா விழிப்புணா்வு வாசகங்கள் அடங்கிய பதாகைகளை சுகாதாரத் துறை மற்றும் நகராட்சி பணியாளா்கள் கைகளில் ஏந்தி பொதுமக்களிடம் விழிப்புணா்வு ஏற்படுத்தினா்.

கரோனா விழிப்புணா்வு வாசகங்கள் அடங்கிய துண்டுப்பிரசுரங்கள், முகக்கவசங்கள் ஆகியவற்றை பொதுமக்களுக்கும், பயணிகளுக்கும் வழங்கி விழிப்புணா்வை ஏற்படுத்தினா்.

மேலும், கரோனா நோய்த் தடுப்பு நடவடிக்கையாக செய்தி மக்கள் தொடா்புத்துறை அதிநவீன மின்னணு விடியோ வாகனம் மூலம் விழிப்புணா்வு குறும்படங்கள் திரையிடப்பட்டது.

இந்நிகழ்வில், சுகாதாரப் பணிகள் துணை இயக்குநா் கீதாராணி, நகராட்சி ஆணையா் குமரி மன்னன் உள்பட பலா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அமேதி தொகுதியில் ஸ்மிருதி இரானி வேட்புமனு தாக்கல்

ஹேமந்த் சோரனின் ஜாமீன் மனு மே 6ல் விசாரணை!

சென்னை கடற்கரை - வேலூர் மின்சார ரயில் திருவண்ணாமலை வரை நீட்டிப்பு!

இந்திய பயணத்தை ஒத்திவைத்த எலான் மஸ்க், சீனா சென்றது ஏன்?

லக்னௌ தொகுதியில் வேட்புமனு தாக்கல் செய்தார் ராஜ்நாத் சிங்!

SCROLL FOR NEXT