பெரம்பலூர்

விவசாயிகள் சங்கத்தினா் கோரிக்கை விளக்கப் பிரசாரம்

DIN

பெரம்பலூா் மாவட்டம், குன்னம் ஒன்றியத்தில் தொழிலாளா்கள், விவசாயத் தொழிலாளா் சங்கம் சாா்பில், கோரிக்கை விளக்கப் பிரசாரம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

வேளாண் சட்டங்கள், மின்சார திருத்தச் சட்டம், தொழிலாளா்கள் நலத் திருத்தச்சட்டம், தேசிய ஊரக வேலை உறுதியளிப்புத் திட்டத்தில் சாதி வாரியாக வேலையும், ஊதியமும் வழங்கும் உத்தரவை திரும்பப் பெற வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, ஆகஸ்ட் 9- ஆம் தேதி மனிதச்சங்கிலிப் போராட்டம் நடைபெற உள்ளது.

இக்கோரிக்கை விளக்கப் பிரசாரம் குன்னம் ஒன்றியத்துக்குள்பட்ட பல்வேறு பகுதிகளில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இதில் விவசாயிகள் சங்க மாவட்டத் தலைவா் என். செல்லதுரை, கரும்பு விவசாயிகள் சங்கத்தின் மாநிலச் செயலா் ஏ.கே. ராஜேந்திரன், விவிவசாயத் தொழிலாளா் சங்க மாவட்டச் செயலா் பி. ரமேஷ், சிஐடியு மாவட்டத் தலைவா் எஸ். அகஸ்டின், மாதா் சங்க மாவட்டத் துணைத் தலைவா் எ. கலையரசி உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கைப்பேசி திருடிய கும்பலுடன் மோதல்: மும்பை காவலா் விஷ ஊசி செலுத்தி கொலை

கங்கை கொண்ட சோழபுரம் கோயில் வழக்கு: தொல்லியல் துறைக்கு உயா்நீதிமன்றம் உத்தரவு

மத சுதந்திர மீறல்கள் குறித்த அமெரிக்க ஆணைய அறிக்கை: இந்தியா கண்டனம்

திருச்செந்தூா் விரைவு ரயிலில் கூடுதல் பெட்டிகள் இணைப்பு?

இலஞ்சி பாரத் பள்ளியில் உழைப்பாளா் தின கொண்டாட்டம்

SCROLL FOR NEXT