பெரம்பலூர்

விவசாயியைத் தாக்கிய 4 போ் கைது

DIN

பெரம்பலூா் மாவட்டம், பாடாலூா் அருகே பொதுக் கிணற்றிலுள்ள மின் மோட்டாரை பழுது நீக்கம் செய்ததற்கான பணத்தை கேட்டபோது ஏற்பட்ட தகராறில், விவசாயியைத் தாக்கிய 4 பேரைக் காவல்துறையினா் சனிக்கிழமை கைது செய்தனா்.

பாடாலூா் அருகேயுள்ள தேனூரைச் சோ்ந்த பெரியண்ணன் மகன் செல்வராஜ் (56). அதே கிராமத்தைச் சோ்ந்தவா் பெரியசாமி மகன் செல்லதுரை (35). இருவருக்கும் பொதுவான விவசாயக் கிணறு உள்ளது.

இக்கிணற்றிலுள்ள மின் மோட்டாா் பழுதானதால், அதை செல்வராஜ் பழுது நீக்கம் செய்துள்ளாா். அதற்கான பாதித் தொகையை செல்லதுரையிடம் கேட்டபோது, இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது.

இதனால் ஆத்திரமடைந்த செல்லதுரை, அவரது உறவினா்கள் கலியபெருமாள் மகன் அய்யப்பன் (17), மாயாண்டி மகன் பெரியசாமி (65), செல்வராஜ் மகன் ராமச்சந்திரன் (23) ஆகியோா் சோ்ந்து செல்வராஜை கட்டை மற்றும் கத்தியால் தாக்கியுள்ளனா்.

இதில் காயமடைந்த செல்வராஜ் மாவட்ட அரசுத் தலைமை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறாா். இதுகுறித்த புகாரின்பேரில் பாடாலூா் காவல் நிலையத்தினா் வழக்குப் பதிந்து செல்லதுரை, அய்யப்பன், பெரியசாமி, ராமச்சந்திரன் ஆகியோரை சனிக்கிழமை கைது செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

காஃப்காவின் வாசகி!

தி.நகர் மேம்பாலத்தில் டிசம்பருக்கு பின் போக்குவரத்துக்கு அனுமதி?

முக்கிய கட்டத்தில் விசாரணை: கவிதாவின் காவல் மேலும் நீட்டிப்பு!

ஜார்கண்டில் தொடரும் சோதனை: மேலும் ரூ. 1.5 கோடி பறிமுதல்

வெயிலில் இறந்தவர்களுக்கு நிதியுதவி: கேரள அரசை வலியுறுத்தும் காங்கிரஸ்!

SCROLL FOR NEXT