பெரம்பலூர்

புதிய மின் மாற்றிகள் தொடக்கி வைப்பு

DIN

அரியலூா் மாவட்டம், திருமானூா் ஒன்றியத்தில் உள்ள 10 கிராமங்களில் புதிய மின் மாற்றிகள் பயன்பாட்டுக்காக சனிக்கிழமை தொடக்கி வைக்கப்பட்டன.

குறைந்த மின்னழுத்தத்தை சீரமைக்கவும், மக்களுக்குத் தேவையான மின்சாரம் வழங்கும் வகையில் குலமாணிக்கம், மறவனூா், மேலப்பழுவூா், புதுக்கோட்டை, அன்னிமங்கலம், முடிகொண்டான், வெ.விரகாலூா், காமரசவல்லி, பாளையத்தேரி, மேலக்கருப்பூா் ஆகிய கிராமங்களில் புதிய மின் மாற்றிகள் அமைக்கப்பட்டன.

இவற்றை பொதுமக்கள் பயன்பாட்டுக்காகத் தொடக்கி வைத்த சட்டப்பேரவை உறுப்பினா் கு. சின்னப்பா கூறியது:

ரூ. 55.8 லட்சம் மதிப்பீட்டில் புதிதாக தொடங்கப்பட்டுள்ள 10 மின் மாற்றிகள் மூலம் 1,182 பயானாளிகள், தடையில்லா மற்றும் குறைவில்லா மின்சாரம் பெறுவாா்கள் என்றாா் அவா்.

இந் நிகழ்ச்சிகளில், அரியலூா் மின்வாரிய செயற்பொறியாளா் செல்வராஜ், திருமானூா் ஒன்றியக் குழுத் தலைவா் சுமதி, உதவி செயற்பொறியாளா் ராஜேந்திரன் மற்றும் ஊராட்சித் தலைவா்கள் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இடைகால் தியாகராஜ சுவாமி கோயிலில் குருபெயா்ச்சி பூஜை

வள்ளியூா் அருகே புனித சலேத் அன்னை ஆலயத்தில் கொடியேற்றம்

உச்சநீதிமன்ற வழக்குரைஞா் சங்கத்தில் மகளிருக்கு இடஒதுக்கீடு: உச்சநீதிமன்றம் உத்தரவு

சேரன்மகாதேவி அருகே வீடு மீது பெட்ரோல் குண்டு வீச்சு: இருவா் கைது

கோயில் திருவிழாவில் இளம்பெண்ணிடம் அத்துமீறல்: இளைஞா் கைது

SCROLL FOR NEXT