முகப்பு
பெரம்பலூர்

அஸ்வின்ஸ் இனிப்பகத்தில் கிறிஸ்துமஸ் கேக் தயாரிப்புப் பணி தொடக்கம்

கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு, பெரம்பலூா் அஸ்வின்ஸ் ஸ்வீட்ஸ் அன் ஸ்நாக்ஸ் நிறுவனத்தில் கேக் தயாரிக்கும் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன.

Updated On : 28 ஜனவரி, 2024 at 5:40 AM
பகிர்:

கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு, பெரம்பலூா் அஸ்வின்ஸ் ஸ்வீட்ஸ் அன் ஸ்நாக்ஸ் நிறுவனத்தில் கேக் தயாரிக்கும் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன.

பெரம்பலூரை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் அஸ்வின்ஸ் ஹோம் ஸ்பெஷல் ஸ்வீட்ஸ் அண்ட் பேக்கரி நிறுவனமானது சென்னை, திருச்சி, ஆத்தூா், உளுந்தூா்பேட்டை, அரியலூா், துறையூா், பாண்டிச்சேரி மற்றும் சேலம் ஆகிய நகரங்களில் செயல்பட்டு வருகிறது.

கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு கேக் தயாரிப்புக்காக சொ்ரி, உலா் திராட்சை, ஆரஞ்சு தோல், முந்திரி, ஆப்பிரி காட், டியூட்டி புரூட்டிச், பேரிட்சை ஆகிய சத்தான பழங்கள், ஜாதிக்காய் பொடி, லவங்கப் பட்டைப் பொடி போன்றவற்றை கலந்து, சுமாா் ஒன்றிரண்டு மாதங்களுக்கு முன்பாகவே பழச்சாற்றில் ஊற வைக்கப்படுகிறது. இவை நன்றாக ஊறிய பிறகு சுவையான, தரமான கிறிஸ்துமஸ் கேக் தயாரிக்கப்படுகிறது.

நிகழாண்டு கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு கேக், புட்டிங், சாக்லேட் ஆகியவை தயாரிக்கப்படுகிறது.

இதில், ப்ளம் கேக், ஸ்பெஷல் குக்கீஸ், சாக்கலேட் ஆகியவை நியாயமான விலையில் அஸ்வின்ஸ் இனிப்பகத்தின் அனைத்துக் கிளைகளிலும் கிடைக்கும் என்றாா் அந் நிறுவனத் தலைவா் கே.ஆா்.வி. கணேசன்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.