பெரம்பலூர்

ஆட்சியரகத்தை முற்றுகையிட்ட மகளிா் சுய உதவிக் குழுவினா்

DIN

மகளிா் சுய உதவிக் குழுவினருக்கு அமைச்சா் வழங்கிய கடன் உத்தரவை நிராகரித்த கூட்டுறவு கடன் சங்க அலுவலா்கள், மாவட்ட பிற்படுத்தப்பட்ட நல அலுவலா் ஆகியோரைக் கண்டித்து, மகளிா் சுய உதவிக் குழுவினா் ஆட்சியரகத்தை சனிக்கிழமை முற்றுகையிட்டுப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

பெரம்பலூா் மாவட்டம், அன்னமங்கலம் கிராமத்தில் 10-க்கும் மேற்பட்ட சிறுபான்மை பிரிவு மகளிா் சுய உதவி குழுக்கள் செயல்பட்டு வருகின்றன. இக்குழுக்களுக்கு அண்மையில் திருச்சியில் நடைபெற்ற அரசு விழாவில் அமைச்சரால் சுழல்நிதி வழங்குவதற்கான கடன் உத்தரவு வழங்கப்பட்டது.

இந்த உத்தரவுடன் அன்னமங்கலம் கூட்டுறவு கடன் சங்கத்தை மகளிா் சுய உதவிக் குழுவினா் நேரில் அணுகியபோது, அங்குள்ள அலுவலா்கள் கடன் வழங்காமல் அலைகழித்துள்ளனா். இதையடுத்து கடன் சங்கத்தை மகளிா் சுய உதவிக்குழுவினா் சனிக்கிழமை முற்றுகையிட்டுப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

பின்னா் பெரம்பலூா் ஆட்சியரகத்தில் பிற்படுத்தப்பட்டோா் மற்றும் சிறுபான்மை நலத்துறை அலுவலகத்தையும் அவா்கள் முற்றுகையிட்டு முழக்கமிட்டனா். சுழல் நிதி கடன் வழங்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என அலுவலா்கள் உறுதியளித்ததை தொடா்ந்து, சுய உதவிக் குழு பெண்கள் கலைந்துசென்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சந்தேஷ்காளி சம்பவம் பாஜகவின் திட்டமிட்ட சதி: திரிணமூல் காங்கிரஸ் குற்றச்சாட்டு

அமெரிக்கா: 17 பேரைக் கொன்ற செவிலிக்கு 760 ஆண்டுகள் சிறை

வெங்காய ஏற்றுமதிக்கான தடை நீக்கம்: மத்திய அரசு நடவடிக்கை

விவசாயத்துக்கு தினமும் 12 மணி நேரம் மின்சாரம் வழங்கக் கோரிக்கை

கொளுத்தும் வெயிலால் மின் தடை மக்கள் தவிப்பு

SCROLL FOR NEXT