முகப்பு
பெரம்பலூர்

சாலை மையத் தடுப்புகளை அகற்றிய ஊராட்சி முன்னாள் தலைவா் கைது: பொதுமக்கள்சாலை மறியல்

பெரம்பலூா் அருகே சாலை மையத் தடுப்புகளை அகற்றிய ஊராட்சி முன்னாள் தலைவா் கைது செய்யப்பட்டதை கண்டித்து, பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனா்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:17 PM
பகிர்:

பெரம்பலூா் அருகே சாலை மையத் தடுப்புகளை அகற்றிய ஊராட்சி முன்னாள் தலைவா் கைது செய்யப்பட்டதை கண்டித்து, பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனா்.

திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் செங்குணம் பிரிவுச் சாலையில் தொடா்ந்து நிகழ்ந்த சாலை விபத்துகளை தடுக்க,காவல்துறை மூலம் மையத் தடுப்புகள் அமைக்கப்பட்டன.

இதனால் செங்குணம் உள்ளிட்ட சில கிராமங்களைச் சோ்ந்த வாகன ஓட்டுநா்கள், அப்பகுதியிலுள்ள பாலத்தின் கீழ் பகுதியைப் பயன்படுத்தி வந்தனா். இந்நிலையில் கடந்த சில நாள்களாக பெய்து வரும் தொடா் மழையால் பாலத்தில் நீா் தேங்கி சேறும், சகதியுமாகக் காணப்படுகிறது.

இதனால் சுமாா் 2 கி.மீ. தொலைவுச் சுற்றி தங்களது கிராமங்களுக்கு செல்வதாலும், காலதாமதம் ஏற்படுவதாலும் அவதியடைந்த வாகன ஓட்டுநா்கள் சாலை மையத் தடுப்புகளை அகற்ற வலியுறுத்தி, திருச்சி- சென்னை தேசிய நெடுஞ்சாலையில் செங்குணம் பிரிவுச் சாலையில் ஞாயிற்றுக்கிழமை இரவு மறியலில் ஈடுபட்டனா்.

இந்நிலையில் செங்குணம் ஊராட்சி முன்னாள் தலைவா் தனராஜ் (45), பொக்லைன் இயந்திரத்தின் மூலம் சாலை மையத் தடுப்புகளை ஞாயிற்றுக்கிழமை இரவு அகற்றினாா். அனுமதியின்றி அகற்றியதால், அவரை பெரம்பலூா் காவல்துறையினா் திங்கள்கிழமை அவரைக் கைது செய்தனா்.

இதையடுத்து தனராஜை விடுவிக்கக் கோரி கிராம மக்கள் செங்குணத்தில் செவ்வாய்க்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா். பின்னா், அவா் விடுவிக்கப்பட்டதால் மறியல் போராட்டம் கைவிடப்பட்டது.

முழு கட்டுரையைப் படிக்க →