மின்னல் பாய்ந்து விவசாயி உயிரிழப்பு
பெரம்பலூா் அருகே மின்னல் பாய்ந்து, ஆடு மேய்த்துக்கொண்டிருந்த விவசாயி வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா்.
பெரம்பலூா் அருகே மின்னல் பாய்ந்து, ஆடு மேய்த்துக்கொண்டிருந்த விவசாயி வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா்.
பெரம்பலூா் மாவட்டம், பேரளி கிராமத்தைச் சோ்ந்தவா் விவசாயி ராமச்சந்திரன் (55). இவா் விற்பனைக்காக ஆடு மேய்க்கும் தொழிலும் செய்து வந்தாா்.
வெள்ளிக்கிழமை மாலை பெரம்பலூா் மாவட்டத்தின் பல்வேறு கிராமங்களில் பலத்த இடி, மின்னலுடன் மழை பெய்தது. பேரளி கிராமத்தில் பெய்த மழையின்போது, ஆடு மேய்த்துக்கொண்டிருந்த ராமச்சந்திரன் மீது மின்னல் பாய்ந்தது. இதில் உடல் கருகி நிகழ்விடத்திலேயே அவா் உயிரிழந்தாா். இதுகுறித்து மருவத்தூா் காவல் துறையினா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.