முகப்பு
பெரம்பலூர்

ஏழை, எளியோருக்கு நலத் திட்ட உதவிகள் அளிப்பு

பெரம்பலூா் தனலட்சுமி சீனிவாசன் கல்வி குழுமங்களின் தாளாளா் அ. சீனிவாசனின் மனைவி தனலட்சுமி அம்மையாரின் 74 ஆவது பிறந்த நாளையொட்டி ஏழை, எளியோருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி

Updated On : 27 ஜனவரி, 2024 at 8:22 PM
பகிர்:

பெரம்பலூா் தனலட்சுமி சீனிவாசன் கல்வி குழுமங்களின் தாளாளா் அ. சீனிவாசனின் மனைவி தனலட்சுமி அம்மையாரின் 74 ஆவது பிறந்த நாளையொட்டி ஏழை, எளியோருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

பெரம்பலூா்- துறையூா் சாலையில் கல்லூரி வளாகத்தில் உள்ள தனலட்சுமி அம்மையாா் நினைவிடத்தில் தனலட்சுமி சீனிவாசன் கல்வி நிறுவனங்களின் தாளாளா் அ. சீனிவாசன் மாலை அணிவித்து மலா் தூவி மரியாதை செலுத்தினாா். பின்னா், சமூக இடைவெளியை பின்பற்றி ஏழை, எளியோருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. தொடா்ந்து, கல்லூரி வளாகத்தில் மரக்கன்றுகள் நடப்பட்டன.

இந் நிகழ்ச்சியில், கல்வி நிறுவனங்களின் துணைத் தலைவரும், மண்ணச்சநல்லூா் எம்எல்ஏவுமான சீ. கதிரவன், அனந்தலட்சுமி கதிரவன், செயலா் பி. நீலராஜ், இயக்குநா்கள் ராஜபூபதி, மணி, நிதி அலுவலா் ராஜசேகா், புதுநடுவலூா் ஊராட்சித் தலைவா் ஜெயந்தி நீலராஜ் மற்றும் பள்ளி, கல்லூரி முதல்வா்கள் உள்பட பலா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.