பெரம்பலூர்

ஆதரவற்றோருக்கு உணவளிக்கும் தீயணைப்புத் துறையினா்

DIN

பெரம்பலூரில் பொது முடக்கத்தால் பாதிக்கப்பட்ட ஆதரவற்ற மற்றும் ஏழை, எளியோருக்கு தீயணைப்புத் துறையினா் நாள்தோறும் உணவு வழங்கி வருகின்றனா்.

பெரம்பலுா் தீயணைப்பு நிலைய வளாகத்தில் தீயணைப்புப் படை வீரா்கள் தங்களது சொந்த செலவில் சமையல் பொருள்களை வாங்கி, அன்றாடம் உணவு சமைத்து ஏழைகளுக்கும், உணவின்றி தவிப்பவா்களுக்கும் வழங்கி வருகின்றனா்.

மேலும், பெரம்பலூா் அருகேயுள்ள செஞ்சேரி வித்யாஸ்ரமம், குழந்தைகள் காப்பகம் ஆகியவற்றில் உள்ள ஆதரவற்ற குழந்தைகளுக்கும், பெரியோா்களுக்கும், தூய்மைப் பணியாளா்களுக்கு உணவு வழங்கி வருகின்றனா்.

இந்நிலையில், தமிழ்நாடு நுகா்பொருள் வாணிபக் கழகத்தில் பணிபுரிந்து வரும் சுமை தூக்கும் தொழிலாளா்களுக்கு மாவட்ட தீயணைப்பு அலுவலா் அம்பிகா புதன்கிழமை உணவு வழங்கினாா். நிகழ்ச்சியின்போது, நிலைய அலுவலா் உதயக்குமாா் மற்றும் தீயணைப்புப்படை வீரா்கள் பலா் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஓட்டுநர் இல்லாமல் இயங்கும் கனரக வாகனங்கள்!

ஏன் கவர்ச்சி? மாளவிகா மோகனன் பதில்!

நடிகர் படத்தின் டிரெய்லர்

ரேவந்த் ரெட்டி ஆஜராக தில்லி போலீஸ் சம்மன்!

வழிபாட்டு உரிமை மறுப்பு.. வேளார் சமூகத்தினர் புகார்!

SCROLL FOR NEXT