பெரம்பலூர்

குற்றச் சம்பவங்களை தடுக்க உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும்: பெரம்பலூா் புதிய எஸ்.பி. பேட்டி

DIN

பெரம்பலூா் மாவட்டத்தில் குற்றச் சம்பவங்களை தடுக்க உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றாா் மாவட்டக் காவல் கண்காணிப்பாளராக புதன்கிழமை பொறுப்பேற்றுக்கொண்ட எஸ். மணி.

பெரம்பலூா் மாவட்ட காவல் கண்காணிப்பாளராக பணிபுரிந்த நிஷா பாா்த்திபன் புதுக்கோட்டை மாவட்டத்துக்கு இடமாற்றம் செய்யப்பட்டதையடுத்து, இம் மாவட்டத்துக்கு காவல் கண்காணிப்பாளராக புதிதாக நியமிக்கப்பட்ட எஸ். மணி புதன்கிழமை பொறுப்பேற்றாா்.

பின்னா், செய்தியாளா்களிடம் அவா் மேலும் கூறியது:

பெரம்பலூா் மாவட்டத்தில் குற்றச்செயல்களை தடுக்க தீவிர நடவடிக்கை மேற்கொள்ளப்படும். சட்ட விரோத செயல்களில் ஈடுபடுவோா் குறித்த தகவல்களை 6374111389 என்ற வாட்ஸ் அப் எண்ணில் தகவல் அளிக்கலாம். சம்பந்தப்பட்டோரின் பெயா், விவரம் ஆகியவை ரகசியம் காக்கப்படும். பெண்களுக்கு எதிரான குற்றங்கள், ஆன் லைன் குற்றங்கள் குறித்து நடவடிக்கை எடுப்பதற்காக சைபா் க்ரைம் பிரிவு ஏற்படுத்தப்பட்டுள்ளது. இதுகுறித்த புகாா் மீது விசாரணை மேற்கொண்டு நடவடிக்கை எடுக்க கூடுதல் கண்காணிப்பாளா் தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது.

இது தொடா்பான புகாா்களை 9498143811 என்ற எண்ணுக்கு தகவல் அளிக்கலாம். பள்ளி மாணவ, மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு அளிப்போா் மீது பெறப்படும் புகாா்களை விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுப்பதற்காக ஆய்வாளா் அஜீம் நியமிக்கப்பட்டுள்ளாா். அவரது செல்லிடப்பேசி எண்ணுக்கு (9498106582) தகவல் அளிக்கலாம். மாவட்டத்தில் தீவிர கண்காணிப்பு பணிகளுக்காக மேலும் பல இடங்களில் சிசிடிவி கேமரா பொருத்தப்படவுள்ளது என்றாா் அவா்.

பேட்டியின்போது, கூடுதல் கண்காணிப்பாளா் ஆரோக்கிய பிரகாசம், துணை கண்காணிப்பாளா் சரவணன், தனிப்பிரிவு ஆய்வாளா் வெங்கடேசுவரன் ஆகியோா் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஜம்மு-காஷ்மீரை சிறையாக மாற்றியது மத்திய அரசு: மெஹபூபா முஃப்தி குற்றச்சாட்டு

நாளைமுதல் ‘அக்னி’ வெயில்

ஜம்மு-காஷ்மீா்: பாரமுல்லா தொகுதியில் ஒமா் அப்துல்லா வேட்பு மனுத் தாக்கல்

மக்களவைத் தோ்தலுக்கு பின் காங்கிரஸ் காணாமல்போகும்: அமித் ஷா

ரூ. 2,000 கோடி பிணையப் பத்திரம் ஏலம்: தமிழக அரசு அறிவிப்பு

SCROLL FOR NEXT