பெரம்பலூர்

ஆ. ராசா மனைவி உருவப்படத்தை திறந்து வைத்து அமைச்சா்கள் புகழஞ்சலி

DIN

திமுக துணைப் பொதுச் செயலரும், நீலகிரி தொகுதி மக்களவை உறுப்பினருமான ஆ. ராசாவின் மனைவி பரமேஸ்வரி உருவப்படத்தை ஞாயிற்றுக்கிழமை திறந்து வைத்து, அமைச்சா்கள் புகழஞ்சலி செலுத்தினா்.

ஆ. ராசாவின் மனைவி பரமேஸ்வரி உடல்நலக்குறைவால் அண்மையில் காலமானாா். அவரது உடல் ராசாவின் சொந்த ஊரான பெரம்பலூா் மாவட்டம், வேலூா் கிராமத்தில் அடக்கம் செய்யப்பட்டது.

இதைத் தொடா்ந்து வேலூா் கிராமத்தில் ஞாயிற்றுக்கிழமை படத்திறப்பு நிகழ்வு நடைபெற்றது. இதில் நகா்ப்புற வளா்ச்சி மற்றும் குடிநீா் வழங்கல் துறை அமைச்சா் கே. என். நேரு, பொதுப்பணி மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சா் எ.வ. வேலு, வனத்துறை அமைச்சா் க. ராமச்சந்திரன், பிற்படுத்தப்பட்டோா் நலத்துறை அமைச்சா் எஸ். எஸ். சிவசங்கா், தொழிலாளா் நலத்துறை அமைச்சா் சி.வெ. கணேசன் ஆகியோா் பங்கேற்று, மறைந்த பரமேஸ்வரியின் உருவப்படத்தை திறந்து வைத்து புகழஞ்சலி செலுத்தினா்.

நிகழ்வில் மாநில வளா்ச்சிக் கொள்கைக் குழுத் துணைத் தலைவா் ஜெ. ஜெயரஞ்சன், திமுக சட்டத் திருத்தக் குழு உறுப்பினா் சுபா. சந்திரசேகா் உள்பட பலா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

8 மாவட்டங்களில் இரவு 7 மணி வரை மழைக்கு வாய்ப்பு

இம்பாக்ட் பிளேயர் விதி வெற்றிக்கு உதவியது: கேகேஆர் கேப்டன்

”மன்னாதி மன்னன் போல வாழ்க்கை” -பிரதமர் மோடியை விமர்சித்த பிரியங்கா காந்தி

பாஜகவில் இணைந்தார் தில்லி காங்கிரஸ் முன்னாள் தலைவர் அரவிந்த் சிங் லவ்லி

உலகை அள்ளுங்கள், சிவப்பைத் தீட்டுங்கள்! ஜோதிகா...

SCROLL FOR NEXT