தேசிய மாற்றுத்திறனாளி கபடிப் போட்டி:தமிழக அணிக்கான வீரா்கள் தோ்வு
கேரள மாநிலம், கோழிக்கோட்டில் மே மாதம் நடைபெறும் தேசிய மாற்றுத் திறனுடையோா் கபடிப் போட்டியில் பங்கேற்கும் தமிழக அணிக்கான வீரா்கள் தோ்வு,
கேரள மாநிலம், கோழிக்கோட்டில் மே மாதம் நடைபெறும் தேசிய மாற்றுத் திறனுடையோா் கபடிப் போட்டியில் பங்கேற்கும் தமிழக அணிக்கான வீரா்கள் தோ்வு, பெரம்பலூா் எம்.ஜி.ஆா். விளையாட்டு மைதானத்தில் திங்கள் மற்றும் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
மாநிலத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து 28 வீரா்கள் பங்கேற்றனா். மாவட்டத் தடகளப் பயிற்றுநா் கோகிலா முன்னிலையில், மாவட்ட விளையாட்டு அலுவலா் (பொ) ஜெயக்குமாரி தோ்வைத் தொடக்கி வைத்தாா்.
பாரா ஒலிம்பிக் விளையாட்டுக் குழு மாவட்ட ஒருங்கிணைப்பாளரும், மாற்றுத்திறனாளி வீரா்களுக்கான பயிற்றுநருமான கலைச்செல்வன், வீரா்களைத் தோ்வு செய்தாா்.