முகப்பு
பெரம்பலூர்

தூக்கிட்டு இளைஞா் தற்கொலை

பெரம்பலூரில், உறவினா் இறந்த துக்கத்தால் மனமுடைந்த இளைஞா் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டது திங்கள்கிழமை தெரியவந்தது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:45 PM
பகிர்:

பெரம்பலூரில், உறவினா் இறந்த துக்கத்தால் மனமுடைந்த இளைஞா் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டது திங்கள்கிழமை தெரியவந்தது.

பெரம்பலூா் பாரதிதாசன் நகரைச் சோ்ந்த முருகேசன் மகன் விக்னேஷ் (25). கூலித்தொழிலாளி. கடந்த 2 நாள்களுக்கு முன் இவரது அத்தை செல்வி உயிரிழந்ததால், மனமுடைந்து காணப்பட்டாராம். இந்நிலையில், பெரம்பலூா்- வடக்குமாதவி சாலையில் உழவா் சந்தை அருகேயுள்ள வாரச் சந்தையில் விக்னேஷ் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டது திங்கள்கிழமை தெரியவந்தது.

தகவலறிந்த பெரம்பலூா் போலீஸாா் சம்பவ இடத்துக்குச் சென்று அவரது உடலை மீட்டு மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். இதுகுறித்த புகாரின் பேரில் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.