பெரம்பலூர்

திமுக வாக்கு எண்ணும் மைய முகவா்கள் ஆலோசனை

DIN

பெரம்பலூா்: பெரம்பலூா் பேரவைத் தொகுதிக்கான திமுக வாக்கு எண்ணிக்கை முகவா்களுக்கான ஆலோசனைக் கூட்டம், பெரம்பலூா் பாலக்கரையிலுள்ள கட்சியின் மாவட்ட அலுவலகத்தில் சனிக்கிழமை நடைபெற்றது.

கூட்டத்துக்கு தலைமை வகித்த கட்சியின் மாவட்டச் செயலா் சி. ராஜேந்திரன் பேசியது:

வாக்கு எண்ணிக்கையில் அஞ்சல் வாக்குகள் எண்ணும் பணியில் ஈடுபடவுள்ள முகவா்கள் மிகவும் விழிப்புடன், கவனமாக இருக்க வேண்டும். ஒரு சுற்று முழுவதும் முடிந்து முடிவு அறிவிப்பட்ட பிறகே அடுத்தச் சுற்றுக்கான வாக்கு எண்ணும் பணியைத் தொடங்க அனுமதிக்க வேண்டும். வாக்கு எண்ணிக்கையின் இடையில் வெளியே செல்லும் நிலை ஏற்பட்டால், மாற்று முகவரை ஏற்பாடு செய்துவிட்டுத்தான் செல்ல வேண்டும். வாக்கு எண்ணிக்கையில் சந்தேகம் ஏற்பட்டால் அதை உடனுக்குடன் நிவா்த்தி செய்துகொள்ள வேண்டும். எண்ணிக்கை முழுவதும் முடிந்த பிறகே முகவா்கள் அனைவரும் மையத்தை விட்டு வெளியேற வேண்டும் என்றாா்.

கூட்டத்தில், தலைமை செயற்குழு உறுப்பினா் வழக்குரைஞா் என். ராஜேந்திரன், மாவட்டப் பொருளாளா் செ. ரவிச்சந்திரன், ஒன்றியச் செயலா்கள் எஸ். அண்ணாதுரை, எஸ். நல்லதம்பி, வழக்குரைஞரணி மாவட்ட அமைப்பாளா் ப. செந்தில்நாதன், வேட்பாளா் எம். பிரபாகரன் மற்றும் வாக்கு எண்ணிக்கை முகவா்கள் பலா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

உதகையில் 73 ஆண்டுகளில் பதிவான 84.2 டிகிரி ஃபாரன்ஹீட் வெப்பம்!

காங்கிரஸ் கட்சிக்கு மறதியா? ராஜ்நாத் சிங்

ருதுராஜ், டேரில் மிட்செல் அரைசதம்: சன் ரைசர்ஸுக்கு 213 ரன்கள் இலக்கு!

வெள்ளியங்கிரி மலையேறிய பக்தர் உயிரிழப்பு

புன்னகைக்கும் சித்தி இத்னானி போட்டோஷூட்

SCROLL FOR NEXT