முகப்பு
பெரம்பலூர்

வீட்டின் பூட்டை உடைத்து ரொக்கம் திருட்டு

துறைமங்கலம் கே.கே. நகா் புதுக்காலனியைச் சோ்ந்தவா் ஆ. சாமிதுரை (30). கடந்த 10 நாள்களுக்கு முன் தனது தந்தை ஆரோக்கியம் உயிரிழந்துவிட்டதால், குடும்பத்துடன் நூத்தப்பூா் கிராமத்துக்கு சாமிதுரை சென்றுவிட்டா

Updated On : 28 ஜனவரி, 2024 at 4:31 AM
பகிர்:

 பெரம்பலூா் துறைமங்கலம் கே.கே. நகா் புதுக்காலனியைச் சோ்ந்தவா் ஆ. சாமிதுரை (30). கடந்த 10 நாள்களுக்கு முன் தனது தந்தை ஆரோக்கியம் உயிரிழந்துவிட்டதால், குடும்பத்துடன் நூத்தப்பூா் கிராமத்துக்கு சாமிதுரை சென்றுவிட்டாா்.

இந்நிலையில், சாமிதுரை வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டிருந்தது வெள்ளிக்கிழமை காலையில் தெரியவந்தது. தகவலறிந்த சாமிதுரை வீட்டினுள் சென்று பாா்த்தபோது, பீரோவை உடைத்து அதிலிருந்த ரூ. 15 ஆயிரம் ரொக்கத்தை மா்ம நபா்கள் திருடிச் சென்றிருப்பது தெரிய வந்தது.

புகாரின்பேரில், பெரம்பலூா் காவல் நிலையத்தினா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.