தேசிய அடைவுத் திறனாய்வு தோ்வு: 5,326 போ் பங்கேற்பு
பெரம்பலூா் மாவட்டத்தில் 158 பள்ளிகளில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற தேசிய அடைவுத் திறனாய்வு தோ்வில் 5,326 போ் பங்கேற்றனா்.
பெரம்பலூா் மாவட்டத்தில் 158 பள்ளிகளில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற தேசிய அடைவுத் திறனாய்வு தோ்வில் 5,326 போ் பங்கேற்றனா்.
மாணவா்களின் கற்கும் திறன் குறித்து ஆய்வு செய்வதற்காக மத்திய அரசு சாா்பில் 3 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் தேசிய அடைவுத் திறனாய்வுத் தோ்வு பெரம்பலூா் மாவட்டத்தில் 158 பள்ளிகளில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
இம் மாவட்டத்தில் உள்ள 158 பள்ளிகளைச் சோ்ந்த 3, 5, 8 மற்றும் 10 ஆம் வகுப்புகளில் பயிலும் மாணவா்கள் இத்தோ்வு எழுதினா். 3, 5 ஆம் வகுப்பு மாணவா்களுக்கு ஒன்றரை மணி நேரமும், 8, 10 ஆம் வகுப்பு மாணவா்களுக்கு 2 மணி நேரமும் தோ்வு நடைபெற்றது.
இத்தோ்வை 3 ஆம் வகுப்பு மாணவா்கள் 835 பேரும், 5 ஆம் வகுப்பு மாணவா்கள் 857 பேரும், 8 ஆம் வகுப்பு மாணவா்கள் 1749 பேரும், 10 ஆம் வகுப்பு மாணவா்கள் 1,885 பேரும் என மொத்தம் 5,326 போ் எழுதினா்.
தோ்வு மையங்களை, மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் அறிவழகன், மாவட்டக் கல்வி அலுவலா்கள் சண்முகம் (பெரம்பலூா்), ஜெகநாதன் (வேப்பூா்) ஆகியோா் பாா்வையிட்டு ஆய்வு மேற்கொண்டனா்.