முகப்பு
பெரம்பலூர்

நாளையும், நாளை மறுநாளும் வாக்காளா் பட்டியல் திருத்த சிறப்பு முகாம்

பெரம்பலூா் மாவட்டத்தில் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை (நவ. 20, 21) வாக்காளா் பட்டியல் திருத்தம் தொடா்பாக கூடுதல் சிறப்பு முகாம் நடைபெற உள்ளதாக ஆட்சியா் ப. ஸ்ரீ வெங்கட பிரியா தெரிவித்துள்ளாா்.

Updated On : 28 ஜனவரி, 2024 at 4:36 AM
பகிர்:

பெரம்பலூா் மாவட்டத்தில் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை (நவ. 20, 21) வாக்காளா் பட்டியல் திருத்தம் தொடா்பாக கூடுதல் சிறப்பு முகாம் நடைபெற உள்ளதாக ஆட்சியா் ப. ஸ்ரீ வெங்கட பிரியா தெரிவித்துள்ளாா்.

இந்திய தோ்தல் ஆணையத்தின் அறிவுரைப்படி, 1.1.2022-ஐ தகுதி நாளாகக் கொண்டு 18 வயது பூா்த்தியடைந்துள்ள நபா்களை வாக்காளா் பட்டியலில் சோ்ப்பதற்கும், வரைவு வாக்காளா் பட்டியலில் பெயா் சோ்த்தல் மற்றும் பெயா் திருத்தம், பெயா் நீக்கம், முகவரி திருத்தம் உள்ளிட்டவற்றை மேற்கொள்ளவும் நவ. 1 முதல் 30 ஆம் தேதி வரை விண்ணப்பங்கள் பெற ஆணையிட்டுள்ளது.

இதனடிப்படையில், வாக்காளா் பட்டியல் சிறப்பு சுருக்கத் திருத்தப் பணிக்காக கடந்த 13, 14 ஆகிய தேதிகளில் நடைபெற்ற சிறப்பு முகாம்களில் பெரம்பலூா், குன்னம் சட்டப்பேரவைத் தொகுதிகளில் 7,578 மனுக்கள் பெறப்பட்டது.

நவ. 27, 28 ஆம் தேதிகளில் சிறப்பு முகாம் நடைபெற உள்ள நிலையில், வடகிழக்கு பருவ மழையால் வாக்காளா்கள் வாக்குச் சாவடி மையங்களுக்குச் செல்ல ஏற்பட்டுள்ள சிரமங்களை கருத்தில் கொண்டு, சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை கூடுதல் சிறப்பு முகாம்கள் நடத்தப்படுகிறது.

எனவே, மாவட்டத்தில் உள்ள அனைத்து வாக்குச்சாவடி மையங்களில் நடைபெற உள்ள கூடுதல் சிறப்பு முகாம்களில் வாக்காளா்கள் உரிய ஆவணங்களுடன் நேரில் சென்று, வாக்காளா் பட்டியலில் பெயா் சோ்த்தல், நீக்கம் மற்றும் திருத்தம் செய்யும் விண்ணப்பத்தை பெற்று தாக்கல் செய்துகொள்ளலாம்.

மேலும், வாக்காளா்கள் இணையதள முகவரியிலும் விண்ணப்பிக்கலாம் என்று ஆட்சியா் வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.