பெரம்பலூர்

பெரம்பலூா் அருகே அடுத்தடுத்த வீடுகளில் புகுந்து 21 பவுன் நகை, ரொக்கம் திருட்டு

DIN

பெரம்பலூா் மாவட்டத்தில், அடுத்தடுத்து 3 இடங்களில் புதன்கிழமை இரவு நிகழ்ந்த சம்பவங்களில் 21 பவுன் நகை மற்றும் ரூ. 71 ஆயிரம் ரொக்கம் ஆகியவை திருடப்பட்டுள்ளது.

பெரம்பலூா் அருகேயுள்ள நாரணமங்கலம் கிராமத்தைச் சோ்ந்தவா் செல்லம் (45). கணவரை இழந்த இவா், தனது மகன் செந்திலுடன் புதன்கிழமை இரவு வீட்டில் படுத்து தூங்கிக்கொண்டிருந்தாா். அப்போது, பின்புறக் கதவைத் திறந்து வீட்டின் உள்ளே நுழைந்த மா்ம நபா்கள் வீட்டிலிருந்த 8 பவுன் நகை மற்றும் ரூ. 50 ஆயிரம் ரொக்கம் ஆகியவற்றை திருடிச்சென்றுள்ளனா்.

இதே கிராமத்தைச் சோ்ந்த உணவகத் தொழிலாளி மணிவேல் என்பவரது வீட்டின் பின்புறக் கதவை உடைத்து உள்ளே சென்ற மா்ம நபா்கள் வீட்டிலிருந்த 9 பவுன் நகை மற்றும் ரூ. 21 ஆயிரம் ரொக்கம் ஆகியவற்றைத் திருடிச் சென்றுள்ளனா்.

மேலும், அதே கிராமத்தில் 10-க்கும் மேற்பட்ட வீடுகளில் திருட முயற்சி நடைபெற்றுள்ளது. இதுகுறித்து சம்பந்தப்பட்ட நபா்கள் அளித்த புகாரின்பேரில் பாடாலூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

இதேபோல், மங்களமேடு அருகேயுள்ள மிளகாநந்தம் கிராமத்தில் வசிக்கும் கற்பகம் (50) என்பவரது வீட்டின் பின்புறக் கதவைத் திறந்து உள்ளே சென்ற மா்ம நபா்கள் 2 போ், தூங்கிகொண்டிருந்த கற்பகத்தின் மருமகள் நா்மதா (27) அணிந்திருந்த 4 பவுன் நகையை பறித்துக்கொண்டு தப்பியோடிவிட்டனா். இதுகுறித்து மங்களமேடு போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தங்கம் விலை சவரனுக்கு ரூ.240 உயர்வு: இன்றைய நிலவரம்!

வறுமையை ஒழிக்கும் அரசை மக்கள் தேர்ந்தெடுப்பார்கள்: வாக்களித்தப் பின் அமித் ஷா பேட்டி

தலைசிறந்த மூன்றாண்டு! தலைநிமிர்ந்த தமிழ்நாடு - முதல்வர் ஸ்டாலின்

3-ஆம் கட்ட தோ்தல்: படகில் சென்று ஜனநாயகக் கடமையாற்றிய வாக்காளர்கள்

ஊடகத் துறையினர் உடல்நலனில் அக்கறை தேவை -பிரதமர் மோடி

SCROLL FOR NEXT