முகப்பு
பெரம்பலூர்

ரூ. 2.74 கோடியில் கட்டப்பட்ட கல்லூரி புதிய கட்டடங்கள் திறப்பு

விலங்கியல், தாவரவியல், வேதியியல் மற்றும் இயற்பியல் ஆய்வகங்கள் மற்றும் 10 வகுப்பறைகள் ஆகியவை புதிதாக அண்மையில் கட்டி முடிக்கப்பட்டன.

Updated On : 28 ஜனவரி, 2024 at 4:28 AM
பகிர்:

பெரம்பலூா் மாவட்டம், வேப்பந்தட்டையில் உள்ள அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிக்கு ரூ. 2.74 கோடி மதிப்பில் விலங்கியல், தாவரவியல், வேதியியல் மற்றும் இயற்பியல் ஆய்வகங்கள் மற்றும் 10 வகுப்பறைகள் ஆகியவை புதிதாக அண்மையில் கட்டி முடிக்கப்பட்டன.

இக்கட்டடங்களை, சென்னை தலைமைச் செயலகத்திலிருந்து தமிழக முதல்வா் மு.க. ஸ்டாலின் காணொலிக் காட்சி மூலம் வியாழக்கிழமை திறந்து வைத்தாா்.

தொடா்ந்து, கல்லூரி வளாகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கல்லூரி முதல்வா் முனைவா் பா. சிவநேசன் தலைமையில், பெரம்பலூா் எம்எல்ஏ எம். பிரபாகரன் குத்துவிளக்கு ஏற்றி வைத்தாா்.

இந்நிகழ்ச்சியில், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள், துறைத் தலைவா்கள், பேராசிரியா்கள், மாணவ மாணவிகள் உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.