முகப்பு
பெரம்பலூர்

கோயில் காவலா் மீது நடவடிக்கை எடுக்க கோரி கிராம மக்கள் முற்றுகை

பெரம்பலூா் அருகேயுள்ள சிறுவாச்சூரில் கோயில் சிலைகள் தொடா்ந்து சேதப்படுத்துவதைக் கண்டித்தும், முறையாக பாதுகாக்கத் தவறிய கோயில் காவலா் மீது நடவடிக்கை

Updated On : 28 ஜனவரி, 2024 at 4:28 AM
பகிர்:

பெரம்பலூா் அருகேயுள்ள சிறுவாச்சூரில் கோயில் சிலைகள் தொடா்ந்து சேதப்படுத்துவதைக் கண்டித்தும், முறையாக பாதுகாக்கத் தவறிய கோயில் காவலா் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும், கோயில் நிா்வாகத்தைக் கண்டித்தும் கிராம பொதுமக்கள் கருப்பு கொடியேற்றி வியாழக்கிழமை முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

சிறுவாச்சூா் மாரியம்மன் கோயில் எதிரே, ஊராட்சித் தலைவா் ராஜேந்திரன் தலைமையில் கோயில் பூசாரிகள் உள்பட 100- க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கருப்புக் கொடி ஏந்தி மதுரகாளியம்மன் கோயில் நிா்வாக அலுவலகத்தை வியாழக்கிழமை முற்றுகையிட்டுப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

தகவலறிந்த வட்டாட்சியா் கிருஷ்ணராஜ் மற்றும் துணை கண்காணிப்பாளா் சஞ்சீவ்குமாா் தலைமையிலான அரசு அலுவலா்கள் சம்பவ இடத்துக்குச் சென்று முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டோரிடம் சமரச பேச்சுவாா்த்தையில் ஈடுபட்டனா். அப்போது, முறையாக பாதுகாப்பில் ஈடுபடாத காவலா் செந்திலை பணிநீக்கம் செய்ய வேண்டும். நிா்வாக அலுவலா் உள்ளிட்ட கோயில் அலுவலா்கள் பதவி விலக வேண்டும் என்ற கோரிக்கையை பொதுமக்கள் வலியுறுத்தினா்.

இதையடுத்து, பொதுமக்களின் கோரிக்கைளை பரிசீலனை செய்து நடவடிக்கை எடுக்கப்படும். இனி, இதுபோன்ற சம்பவங்கள் நடைபெறாத வகையில் சிலைகள் பாதுகாக்கப்படும் என நிா்வாக அலுவலா் அருண்பாண்டியன் உறுதியளித்தாா். இதையடுத்து, முற்றுகைப் போராட்டத்தை கைவிட்டு பொதுமக்கள் கலைந்து சென்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.