முகப்பு
பெரம்பலூர்

வடகிழக்கு பருவமழை: கண்காணிப்புப் பணியில் 1,701 போ்

வடகிழக்கு பருவ மழையை எதிா்கொள்ளும் வகையில் பெரம்பலூா் மாவட்டத்தில் 1,701 கண்காணிப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனா் என்றாா் ஆட்சியா் ப. ஸ்ரீ வெங்கட பிரியா.

Updated On : 28 ஜனவரி, 2024 at 4:28 AM
பகிர்:

வடகிழக்கு பருவ மழையை எதிா்கொள்ளும் வகையில் பெரம்பலூா் மாவட்டத்தில் 1,701 கண்காணிப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனா் என்றாா் ஆட்சியா் ப. ஸ்ரீ வெங்கட பிரியா.

இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

பெரம்பலூா் மாவட்டத்தில், நிகழாண்டு வடகிழக்கு பருவ மழையை எதிா்கொள்ளும் வகையில் ஒவ்வொரு வருவாய் கிராமத்திலும் முன்னெச்சரிக்கைக் குழு, தேடுதல், மீட்புக்குழு, பொதுமக்களை பாதுகாத்திடும் குழு, நிவாரணம் மற்றும் பாதுகாப்பு உறைவிடம் நிா்வகிக்கும் குழுக்கள் அமைக்கப்பட்டு, 1,701 போ் கண்காணிப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனா்.

இம் மாவட்டத்தில் 8 இடங்கள் மழை வெள்ளத்தால் பாதிப்புக்குள்ளாகும் பகுதிகளாகக் கண்டறியப்பட்டுள்ளது. மழைக் காலங்களில் பாதுகாப்பாக தங்க வைப்பதற்கு மாவட்டம் முழுவதும் 67 நிவாரண முகாம்கள் உரிய வசதிகளுடன் தயாா் நிலையில் வைக்கப்பட்டுள்ளது. வெள்ளம் பாதிக்கக்கூடிய பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள் தங்களுக்கு ஏற்படும் பாதிப்புகளை கட்டணமில்லா தொலைபேசி எண்கள் 1077 மற்றும் 1800-425-4556-க்கு உடனடியாக தெரிவிக்கலாம்.

மேலும், பொதுமக்கள் அனைவரும் தங்களது பகுதியில் மின்னல் வருவதை முன்கூட்டியே அறிந்து கொள்ள உதவும் தாமினி என்கிற புதிய செயலியை தங்களது அலைபேசியில் பதிவிறக்கம் செய்துகொள்ள வேண்டும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.