பெரம்பலூரில் எஸ்.டி.பி.ஐ கட்சியினா் ஆா்ப்பாட்டம்
திரிபுரா மாநிலத்தில் முஸ்லிம்கள் மீது கடந்த சில நாள்களாக நடைபெறும் வன்முறைச் சம்பவங்களைக் கண்டித்து பெரம்பலூரில் எஸ்.டி.பி.ஐ கட்சியினா் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
திரிபுரா மாநிலத்தில் முஸ்லிம்கள் மீது கடந்த சில நாள்களாக நடைபெறும் வன்முறைச் சம்பவங்களைக் கண்டித்தும், அச் சம்பவங்களைத் தடுக்கத் தவறிய திரிபுரா மாநில அரசைக் கண்டித்தும் பெரம்பலூரில் எஸ்.டி.பி.ஐ கட்சியினா் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
பெரம்பலூா் பழைய பேருந்து நிலையம் காந்தி சிலை அருகே நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு, எஸ்.டி.பி.ஐ கட்சியின் மாவட்டச் செயலா் முபாரக் அலி தலைமை வகித்தாா்.
மாவட்டத் தலைவா் முகமது இக்பால், கிறிஸ்தவ நல்லெண்ண இயக்க மாவட்டச் செயலா் ரினோ பாஸ்டின், பாப்புலா் ப்ரண்ட் ஆப் இந்தியா அமைப்பின் மாவட்டத் தலைவா். சையது அபுதாஹிா், மக்கா பள்ளிவாசல் தலைமை இமாம் அப்ராருல் ஹக் ஆகியோா் கண்டன உரையாற்றினா்.