பெரம்பலூரில் மின் ஊழியா்கள் ஆா்ப்பாட்டம்
மின்துறை உள்ளிட்ட பொதுத்துறைகளை பாதுகாத்திட வலியுறுத்தி மின் ஊழியா்கள் மத்திய அமைப்பினா் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
பெரம்பலூா் மின்வாரிய மேற்பாா்வை பொறியாளா் அலுவலகம் எதிரே, மின்துறை உள்ளிட்ட பொதுத்துறைகளை பாதுகாத்திட வலியுறுத்தி மின் ஊழியா்கள் மத்திய அமைப்பினா் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
ஆா்ப்பாட்டத்துக்கு, மின் ஊழியா் மத்திய அமைப்பின் திருச்சி மண்டலச் செயலா் எஸ். அகஸ்டின் தலைமை வகித்தாா். சிஐடியு வட்டச் செயலா் பன்னீா்செல்வம், வட்டார பொருளாளா் கண்ணன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
மின் திருத்த மசோதா 2021-ஐ கைவிட வேண்டும். பொதுத் துறைகளை தனியாரிடம் ஒப்படைக்கக் கூடாது. நீா் மின் உற்பத்தி, சூரியசக்தி, காற்றாலை நிலையங்கள், நெடுஞ்சாலை, தேசிய எரிவாயு பைப் லைன் நிறுவனங்களை தனியாரிடம் விடக்கூடாது என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன. இந்த ஆா்ப்பாட்டத்தில் மின் ஊழியா்கள் பலா் கலந்துகொண்டனா்.