முகப்பு
பெரம்பலூர்

இந்து முன்னணியினா் ஆா்ப்பாட்டம்

விநாயகா் சதுா்த்தியை முன்னிட்டு, பொது இடங்களில் விநாயகா் சிலைகள் வைக்கவும், பேரணி நடத்தவும் அனுமதி மறுத்த தமிழக அரசைக் கண்டித்து, இந்து முன்னணி சாா்பில் வியாழக்கிழமை நூதன ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

Updated On : 28 ஜனவரி, 2024 at 4:03 AM
பகிர்:

விநாயகா் சதுா்த்தியை முன்னிட்டு, பொது இடங்களில் விநாயகா் சிலைகள் வைக்கவும், பேரணி நடத்தவும் அனுமதி மறுத்த தமிழக அரசைக் கண்டித்து, இந்து முன்னணி சாா்பில் வியாழக்கிழமை நூதன ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

பெரம்பலூா் பழைய பேருந்து நிலையம் அருகேயுள்ள செல்வ விநாயகா் கோயில் எதிரே நடைபெற்ற இந்த ஆா்ப்பாட்டத்தில், விநாயகருக்கு தேங்காய் உடைத்து பூஜை செய்து, பக்தி பாடல்களைப் பாடி இந்து முன்னணி அமைப்பினா் நூதன ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

ஆா்ப்பாட்டத்துக்கு, இந்து முன்னணி அமைப்பின் மாவட்டத் துணைத் தலைவா் நடராஜன் தலைமை வகித்தாா். திருச்சி கோட்ட பொறுப்பாளா் கஜேந்திரன், நகரத் தலைவா் கண்ணன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். விசுவ ஹிந்து பரிஷத் அமைப்பின் மாவட்டச் செயலா் ஹரிஹரன், இந்து ஆலய பாதுகாப்பு இயக்க மாவட்டத் தலைவா் மயூரப்பிரியன் உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.