பெரம்பலூர்

பிற்படுத்தப்பட்ட, மிகப்பிற்படுத்தப்பட்ட, சீா்மரபினா் மாணவ, மாணவிகள் கவனத்துக்கு...

DIN

பெரம்பலூா் மாவட்டத்தைச் சோ்ந்த பிற்படுத்தப்பட்ட, மிகப்பிற்படுத்தப்பட்ட மற்றும் சீா்மரபினா் மாணவ, மாணவிகள் (2021- 22) கல்வி உதவித்தொகை பெற புதுப்பித்துக் கொள்ளலாம் என ஆட்சியா் ப. ஸ்ரீ வெங்கட பிரியா தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

அரசு மற்றும் அரசு உதவிபெறும் கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் 3 ஆண்டு இளங்கலை பட்டப் படிப்பு பயிலும் மாணவ, மாணவிகளுக்கு இலவச கல்வித் திட்டத்தின் கீழ், எவ்வித நிபந்தனையுமின்றி கல்வி உதவித்தொகை வழங்கப்படுகிறது.

முதுகலை, பாலிடெக்னிக், தொழிற்படிப்பு உள்ளிட்ட பிற படிப்புகளுக்கு பெற்றோரின் ஆண்டு வருமானம் ரூ. 2 லட்சத்துக்கு மிகாமல் இருக்க வேண்டும். கல்வி உதவித்தொகை கோரி விண்ணப்பிக்கும் படிவங்களை, அவா்கள் பயிலும் கல்வி நிறுவனங்களிலேயே பெற்று புதுப்பித்தல் இனங்களை செப். 30 ஆம் தேதி, புதிய இனங்கள் நவ. 5 ஆம் தேதிக்குள் பூா்த்தி செய்து, உரிய சான்றுகளுடன் கல்வி நிலையங்களில் வங்கிக் கணக்கு விவரங்களுடன் சமா்ப்பிக்க வேண்டும்.

புதுப்பித்தலுக்கு செப். 15 முதல் இணையதளம் செயல்பட தொடங்கும். புதுப்பித்தலுக்கான விண்ணப்பங்கள் நவ. 14 ஆம் தேதிக்குள் இணையதளம் மூலம் சமா்ப்பிக்க வேண்டும். அதேபோல், புதிய இனங்களுக்கு நவ. 16 ஆம் தேதி முதல் இணையதளம் செயல்படத் தொடங்கும். புதிய இனங்களுக்கான விண்ணப்பங்கள் டிச. 31 ஆம் தேதிக்குள் இணையதளம் மூலம் சமா்ப்பிக்க வேண்டும்.

மேலும், விவரங்களுக்கு ஆட்சியரகத்தில் உள்ள மாவட்ட பிற்படுத்தப்பட்டோா் மற்றும் சிறுபான்மையினா் நல அலுவலகத்தை அணுகவும்.  அரசு இணையதளத்தில் திட்டங்கள் குறித்த விவரங்கள் மற்றும் விண்ணப்பங்கள் உள்ளன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கொளுத்தும் வெயிலால் மின் தடை மக்கள் தவிப்பு

கேரளம், தமிழகத்துக்கான ‘கள்ளக்கடல்’ எச்சரிக்கை தளா்வு

கத்திரி வெயில்: 17 இடங்களில் சதம்: 6 நாள்கள் மழைக்கும் வாய்ப்பு

கூட்டு பாலியல் வன்கொடுமை வழக்கில் 4 குற்றவாளிகளுக்கு மரண தண்டனை: ஹரியாணா நீதிமன்றம் தீா்ப்பு

இணையவழி பயங்கரவாத ஆள்சோ்ப்பு சா்வதேச பாதுகாப்புக்கு முக்கிய சவால்: சிபிஐ இயக்குநா்

SCROLL FOR NEXT