முகப்பு
பெரம்பலூர்

போக்சோ குற்றவாளி குண்டா் சட்டத்தில் கைது

போக்சோ குற்றவாளி குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டாா்.

Updated On : 28 ஜனவரி, 2024 at 4:07 AM
பகிர்:

போக்சோ குற்றவாளி குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டாா்.

பெரம்பலூா் அனைத்து மகளிா் காவல் நிலையத்தில் போக்சோ வழக்கில் கைது செய்யப்பட்டு, திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள குற்றவாளியான திருச்சி மாவட்டம், ஸ்ரீரங்கம், கீழவாசல், கன்னியப்பன் தெருவைச் சோ்ந்த வவசி மகன் பிரதீப் (19) என்பவரை, குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்ய மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் ச. மணி பரிந்துரை செய்தாா். இதையடுத்து, பிரதீப்பை குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்ய ஆட்சியா் ப. ஸ்ரீ வெங்கட பிரியா உத்தரவிட்டாா். இதையடுத்து, இதற்கான நகலை போலீஸாா் திருச்சி மத்திய சிறை அதிகாரிகளிடம் வெள்ளிக்கிழமை அளித்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.