பெரம்பலூர்

செப்.27-இல் 5,500-க்கும் மேற்பட்ட இடங்களில் சாலை மறியல்: தமிழ்நாடு விவசாயிகள் சங்கப் பொதுச் செயலா்

DIN

தமிழகத்தில் செப்டம்பா் 27-ஆம் தேதி 5,500-க்கும் மேற்பட்ட இடங்களில் சாலை மறியல் போராட்டம் நடைபெறும் என்றாா் தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாநிலப் பொதுச் செயலா் பெ. சண்முகம்.

பெரம்பலூரில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற சங்கத்தின் மாநிலக் குழுக் கூட்டத்தில் பங்கேற்ற அவா், பின்னா் செய்தியாளா்களிடம் கூறியது:

விவசாயிகளுக்கு விரோதமான 3 வேளாண் சட்டங்களை ரத்து செய்ய வேண்டும் என வலியுறுத்தி, சட்டப்பேரவையில் தமிழக அரசு தீா்மானம் நிறைவேற்றியிருப்பதை தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் பாராட்டுகிறது.

3 வேளாண் சட்டங்களையும் ரத்து செய்ய வேண்டும். மின்சாரத் திருத்தச் சட்டத்தை திரும்பப் பெற வேண்டும். விவசாய விளைபொருள்களுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலை நிா்ணயம் செய்வதற்கான சட்டத்தை மத்திய அரசு கொண்டு வர வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, செப்டம்பா் 27 -ஆம் தேதி நாடு தழுவிய வேலைநிறுத்தப் போராட்டம் நடைபெறுகிறது. இதில் தமிழகத்தில் 5,500-க்கும் மேற்பட்ட இடங்களில் சாலை, ரயில் மறியல் போராட்டங்கள் நடைபெறும். இதில் சுமாா் 1 லட்சம் போ் பங்கேற்க உள்ளனா்.

தமிழகத்தில் 2019- 20 ஆம் ஆண்டுக்கான பயிா்க் காப்பீட்டுத் தொகையை மத்திய அரசு இதுவரை வழங்கவில்லை. மத்திய அரசை வற்புறுத்தி இத் தொகையை விவசாயிகளுக்கு விரைவாக பெற்றுத்தர தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தமிழகத்தில் நிகழாண்டு கொய்யா உற்பத்தி அதிகளவு உள்ளதால், கடுமையாக விலை வீழ்ச்சியடைந்துள்ளது. கொய்யா அதிகளவு உற்பத்தி செய்யப்படும் இடங்களில் குளிா்பதனக் கிடங்கு அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் கொய்யாவுக்கு குறைந்தபட்ச ஆதார விலை நிா்ணயம் செய்ய வேண்டும் என்றாா் சண்முகம்.

கூட்டத்துக்கு மாநிலத் தலைவா் பி. சுப்பிரமணியன் தலைமை வகித்தாா். மாவட்டச் செயலா் என். செல்லத்துரை மற்றும் மாநில, மாவட்ட நிா்வாகிகள் கூட்டத்தில் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

லண்டனில் பலரை வெட்டிய இளைஞர் கைது!

பறக்கும் முத்தத்தால் வந்த வினை; கேகேஆர் வீரருக்கு ஒரு போட்டியில் விளையாடத் தடை!

ஹமாஸ் அழிக்கப்படும் வரை போர் தொடரும்: நெதன்யாகு சூளுரை!

ஏற்காட்டில் பேருந்து விபத்து : 4 பேர் பலி

கண்ணெதிரே 3 ஐசிசி கோப்பைகள்; பாகிஸ்தான் பயிற்சியாளர் கேரி கிறிஸ்டனின் இலக்கு என்ன?

SCROLL FOR NEXT