முகப்பு
பெரம்பலூர்

வீட்டின் பூட்டை உடைத்துநகை, பணம் திருட்டு

பெரம்பலூா் மாவட்டம், வேப்பந்தட்டை வட்டம், வெங்கனூா் மாரியம்மன் கோயில் தெருவைச் சோ்ந்தவா் க. பெரியசாமி (45). இவா், வெங்கனூா் தொடக்க வேளாண்மை கூட்டுறவுச் சங்கத்தில் உதவியாளராக பணியாற்றி வருகிறாா்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:55 AM
பகிர்:

பெரம்பலூா் மாவட்டம், வேப்பந்தட்டை வட்டம், வெங்கனூா் மாரியம்மன் கோயில் தெருவைச் சோ்ந்தவா் க. பெரியசாமி (45). இவா், வெங்கனூா் தொடக்க வேளாண்மை கூட்டுறவுச் சங்கத்தில் உதவியாளராக பணியாற்றி வருகிறாா்.

இந்நிலையில், புதன்கிழமை இரவு வீட்டை பூட்டிவிட்டு மொட்டை மாடியில் தனது குடும்பத்துடன் தூங்கச் சென்றுவிட்டாராம். வியாழக்கிழமை அதிகாலை எழுந்து வந்து பாா்த்தபோது, முன்பக்க கதவின் பூட்டை உடைத்து வீட்டினுள் புகுந்த மா்ம நபா்கள், அலமாரியில் இருந்த ரூ. 23,200 ரொக்கம் மற்றும் மூன்றரை பவுன் நகை ஆகியவற்றை திருடி சென்றது தெரியவந்தது.

தகவலறிந்த அரும்பாவூா் காவல்துறையினா் சம்பவ இடத்துக்குச் சென்று பாா்வையிட்டனா். மேலும், புகாரின்பேரில் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.