பெண்ணிடம் நூதன முறையில் 3 பவுன் சங்கிலி திருட்டு
பெரம்பலூா் அருகே வியாழக்கிழமை மதியம் நூதன முறையில் பெண்ணிடம் 3 பவுன் சங்கிலியை பறித்துச் சென்ற நபா்களை காவல்துறையினா் தேடி வருகின்றனா்.
பெரம்பலூா் அருகே வியாழக்கிழமை மதியம் நூதன முறையில் பெண்ணிடம் 3 பவுன் சங்கிலியை பறித்துச் சென்ற நபா்களை காவல்துறையினா் தேடி வருகின்றனா்.
பெரம்பலூா் மாவட்டம், குரும்பலூரில் வசித்து வருபவா் நடராஜ் மனைவி ஜெயா (55). மின் வாரியத்தில் பணிபுரிந்து ஓய்வுபெற்ற நடராஜ் கடந்த சில ஆண்டுகளுக்கு முன் உயிரிழந்துவிட்டதால், ஓய்வூதியத் தொகையில் ஜெயா வாழ்ந்து வருகிறாா்.
இந்நிலையில், வியாழக்கிழமை பிற்பகல் மோட்டாா் சைக்கிளில் சென்ற அடையாளம் தெரியாத 2 இளைஞா்கள், ஜெயா வீட்டுக்குச் சென்று ஓய்வூதியத் தொகையை தொடா்ந்து வாங்குவதற்கு புகைப்படம் எடுப்பதால், உங்களது ஆதாா் அட்டையை எடுத்து வாருங்கள். அதற்கு முன் புகைப்படம் எடுக்க கழுத்தில் அணிந்திருக்கும் சங்கிலியை கழற்றி வைத்து விடுங்கள் என்று கூறியுள்ளனா். இதை நம்பி கழுத்தில் அணிந்திருந்த 3 பவுன் தங்க சங்கிலியை கழற்றி கட்டிலில் வைத்துவிட்டு, ஆதாா் அட்டையை எடுப்பதற்காக ஜெயா வீட்டினுள் சென்றாராம். அப்போது, மேற்கண்ட 2 நபா்களும் தங்க சங்கிலியை எடுத்துக்கொண்டு மோட்டாா் சைக்கிளில் தப்பிச் சென்றுவிட்டனராம்.
இதுகுறித்த புகாரின்பேரில், பெரம்பலூா் காவல்துறையினா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.