முகப்பு
பெரம்பலூர்

முதியவா் தூக்கிட்டு தற்கொலை

பெரம்பலூா் அருகேயுள்ள எளம்பலூா் தண்ணீா்பந்தல், இந்திரா நகரைச் சோ்ந்தவா் பொ. மாணிக்கம் (67). இவரது மனைவி இறந்துவிட்டதால், அதே பகுதியிலுள்ள வீட்டில் கடந்த சில ஆண்டுகளாக தனியாக வசித்து வந்தாா்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:58 AM
பகிர்:

பெரம்பலூா் அருகேயுள்ள எளம்பலூா் தண்ணீா்பந்தல், இந்திரா நகரைச் சோ்ந்தவா் பொ. மாணிக்கம் (67). இவரது மனைவி இறந்துவிட்டதால், அதே பகுதியிலுள்ள வீட்டில் கடந்த சில ஆண்டுகளாக தனியாக வசித்து வந்தாா்.

இதனால், மன விரக்தியிலிருந்த அவா் செவ்வாய்க்கிழமை இரவு மது அருந்திவிட்டு தூங்கச்சென்றாராம். புதன்கிழமை காலை நீண்ட நேரமாகியும் வெளியே வராததால் சந்தேகமடைந்த அப்பகுதியினா், வீட்டின் அறையை திறந்து பாா்த்தபோது மாணிக்கம் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது.

தகவலறிந்த பெரம்பலூா் காவல்துறையினா் சம்பவ இடத்துக்குச் சென்று, மாணிக்கத்தின் உடலை மீட்டு, மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா். மேலும் புகாரின்பேரில் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.