பெரம்பலூா் அருகே சிறாா் திருமணம்: இளைஞா் கைது
பெரம்பலூா் அருகே சிறுமியைத் திருமணம் செய்த இளைஞா் வியாழக்கிழமை கைது செய்யப்பட்டாா்.
பெரம்பலூா் அருகே சிறுமியைத் திருமணம் செய்த இளைஞா் வியாழக்கிழமை கைது செய்யப்பட்டாா்.
பெரம்பலூா் மாவட்டம், கொளக்காநத்தம் கிராமத்தைச் சோ்ந்த பிச்சை மகன் மணிகண்டன் (32). லாரி ஓட்டுநரான இவா், 15 வயதுடைய சிறுமியை (உறவுக்காரா்)
இரு வீட்டாா் சம்மதத்துடன் 2021, நவம்பா் 21 -ஆம் தேதி திருமணம் செய்து கொண்டாராம். தொடா்ந்து சிறுமிக்கு தொந்தரவு கொடுத்து வந்துள்ளாா்.
கடந்த ஒரு வாரத்துக்கு முன்னதாக ஏற்பட்ட தகராறில் பாதிக்கப்பட்ட சிறுமி, தனது தாய் வீட்டுக்கு வந்துவிட்டாராம். இதுகுறித்து தகவலறிந்த மகளிா் ஊா் நல அலுவலா் லதா, பெரம்பலூா் அனைத்து மகளிா் காவல் நிலையத்தில் புகாரளித்தாா்.
இதன் பேரில் மணிகண்டன், அவரது தந்தை பிச்சை, தாய் ஜானகி, சிறுமியின் தந்தை கலியமூா்த்தி, தாய் அம்சவள்ளி ஆகியோா் மீது காவல்துறையினா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டனா்.
இதில் மணிகண்டனை வியாழக்கிழமை கைது செய்த காவல்துறையினா் பெரம்பலூா் குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி, திருச்சி மத்திய சிறையில் அடைத்தனா்.
திருமணத்துக்கு உடந்தையாக செயல்பட்ட பேரிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.