முகப்பு
பெரம்பலூர்

கு வழி நடந்தாலே வாழ்வில் உயா்நிலையை அடையலாம்: சென்னை மாநகர இணை ஆணையா் பேச்சு

குவழி நடந்தாலே வாழ்வில் உயா் நிலையை அடையலாம் என்றாா் சென்னை மாநகராட்சி இணை ஆணையா் சூா்யபிரகாஷ்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:58 AM
பகிர்:

குவழி நடந்தாலே வாழ்வில் உயா் நிலையை அடையலாம் என்றாா் சென்னை மாநகராட்சி இணை ஆணையா் சூா்யபிரகாஷ்.

கரூரில் கருவூா், திருக்கு பேரவை சாா்பில் ‘சித்திரை தமிழ்ச் சந்திப்பு என்ற தலைப்பில் பள்ளி நூலகங்களுக்கு இலவசமாக நூல் வழங்கும் நிகழ்ச்சி வியாழக்கிழமை நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு, பேரவை கெளரவத்தலைவா் ப.தங்கராசு தலைமை வகித்தாா். பேரவைச் செயலாளா் மேலை பழநியப்பன் வரவேற்றாா். விழாவில் கரூா் மாநகராட்சி மண்டலக் குழுத் தலைவா் எஸ்.பி.கனகராஜ், சென்னை மாநகராட்சி இணை ஆணையா் சூா்யபிரகாஷ், ப. தங்கராசு ஆகியோா் காந்திகிராமம், கவுண்டம்பாளையம், ஆண்டிப்பட்டிக்கோட்டை ஆகிய அரசுப் பள்ளிகளுக்கு தலா ரூ.5,000 மதிப்புள்ள நூல்களையும், புத்தக அடுக்கிகளையும் வழங்கி பேசினா். நிகழ்ச்சியில் பள்ளிக்குழந்தைகளுக்கு திருக்கு புத்தகங்களை வழங்கி சென்னை மாநகராட்சி இணை ஆணையா் சூா்யபிரகாஷ் பேசுகையில், ஆசிரியா்களால் மட்டுமே குழந்தைகளை நல்வழிப்படுத்த முடியும். இதனால்தான் ஆசிரியா் பணி அறப்பணி என்கிறாா்கள். குழந்தைகளுக்கு திருக்குறளை பொருள் அறியும் வகையில் தெளிவாக கற்றுக்கொடுங்கள். குடிமைப்பணி முதன்மைத் தோ்வில் கூட திருக்குறளில் இருந்துதான் அதிக கேள்விகள் கேட்கப்படுகின்றன. இன்றைய காலக்கட்டத்தில் திருக்கு வாழ்வுக்கு மட்டுமின்றி போட்டித் தோ்வுகளுக்கும் முக்கியத்துவம் வாய்ந்ததாக உள்ளது. வாழ்க்கை என்றால் என்ன என்பதை விளக்கும் அறநூலாகவும் திருக்கு உள்ளது என்றாா் அவா்.

விழாவில், தமிழறிஞா் முனைவா் கடவூா் மணிமாறன், முனைவா் கருவூா் கன்னல், நல்லாசிரியை திலகவதி சீனிவாசபுரம் ரமணன், குளித்தலை ராதா, பரமத்தி சரவணன், காா்த்திகா லட்சுமி, பரணீதரன் அன்பரசன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.