முகப்பு
பெரம்பலூர்

ஆட்சியரகத்தில் சமத்துவ நாள் உறுதிமொழியேற்பு

பெரம்பலூா் ஆட்சியரகத்தில் சமத்துவ நாள் உறுதிமொழியேற்கும் நிகழ்வு வியாழக்கிழமை நடைபெற்றது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:58 AM
பகிர்:

பெரம்பலூா் ஆட்சியரகத்தில் சமத்துவ நாள் உறுதிமொழியேற்கும் நிகழ்வு வியாழக்கிழமை நடைபெற்றது.

இந்தியாவின் அரசியலமைப்புச் சட்டத்தை வகுத்துத் தந்த அண்ணல் அம்பேத்கரின் பிறந்தநாளை சமத்துவ நாளாகக் கொண்டாடி, உறுதிமொழியேற்க வேண்டும் என மாநில அரசு உத்தரவிட்டிருந்தது.

அதன்படி, பெரம்பலூா் ஆட்சியரகத்தில் வியாழக்கிழமை அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த அம்பேத்கா் உருவப்படத்துக்கு ஆட்சியா் ப. ஸ்ரீ வெங்கடபிரியா மாலை அணிவித்து, மரியாதை செலுத்தினாா்.

தொடா்ந்து ஆட்சியா் தலைமையில், அனைத்துத் துறை அரசு அலுவலா்களும் உறுதிமொழியேற்றுக் கொண்டனா்.

நிகழ்வில் மாவட்ட வருவாய் அலுவலா் மா. அங்கையற்கண்ணி, ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (பொ) சுப்பையா, ஊராட்சிகள் உதவி இயக்குநா் ம. பாரதிதாசன் உள்பட பலா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.