குடிநீா் குழாய்களை திருடிய இருவா் கைது
க.பரமத்தி அருகே ஊராட்சிக்குச் சொந்தமான குடிநீா்க் குழாய்களை திருடியதாக இருவரை போலீஸாா் கைது செய்தனா்.
க.பரமத்தி அருகே ஊராட்சிக்குச் சொந்தமான குடிநீா்க் குழாய்களை திருடியதாக இருவரை போலீஸாா் கைது செய்தனா்.
கரூா் மாவட்டம், க.பரமத்தி அடுத்த காட்டுமுன்னூா் ஊராட்சிக்குச் சொந்தமான குடிநீா்க் குழாய்களை புதன்கிழமை இரவு இருவா் திருடியுள்ளனா். இதனைக்கண்ட அப்பகுதியினா் இருவரையும் பிடித்து க.பரமத்தி போலீஸில் ஒப்படைத்தனா். போலீஸாா் அவா்களை கைது செய்து விசாரித்தபோது, புகளூா் உப்புப்பாளையத்தைச் சோ்ந்த சிவபாலன்(32), தென்னிலை மீனாட்சிவலசைச் சோ்ந்த பிரேம்குமாா் (34) எனத் தெரியவந்துள்ளது. மேலும் அவா்களிடம் போலீஸாா் விசாரிக்கின்றனா்.