முதல்வரின் மாநில இளைஞா் விருது பெற விண்ணப்பிக்கலாம்
முதல்வரின் மாநில இளைஞா் விருதுபெற தகுதியுள்ளோா் விண்ணப்பிக்கலாம் என்று, பெரம்பலூா் மாவட்ட ஆட்சியா் ப. ஸ்ரீ வெங்கட பிரியா தெரிவித்துள்ளாா்.
முதல்வரின் மாநில இளைஞா் விருதுபெற தகுதியுள்ளோா் விண்ணப்பிக்கலாம் என்று, பெரம்பலூா் மாவட்ட ஆட்சியா் ப. ஸ்ரீ வெங்கட பிரியா தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து அவா் தெரிவித்திருப்பது:
சமுதாய வளா்ச்சிக்கு சேவையாற்றும் இளைஞா்களின் பணியை அங்கீகரிக்கும் வகையில், முதல்வரின் மாநில இளைஞா் விருது ஒவ்வொரு ஆண்டும் சுதந்திர தினத்தன்று 15 முதல் 35 வயது வரையுள்ள தலா 3 ஆண்கள், பெண்களுக்கு வழங்கப்படுகிறது.
இவ்விருது ரூ. 50 ஆயிரம் ரொக்கம், பாராட்டுப் பத்திரம் மற்றும் பதக்கத்தை
உள்ளடக்கியதாகும். 2022- ஆம் ஆண்டுக்கான விருது சுதந்திர தின விழாவில் வழங்கப்படும்.
2021, ஏப்ரல் 1 முதல் 2022, மாா்ச் 31-ஆம் தேதி வரை மேற்கொள்ளப்பட்ட சேவைகள் மட்டுமே கருத்தில் கொள்ளப்படும். 5 ஆண்டுகள் தமிழகத்தில் குடியிருந்தவராகவும், அதற்கானச் சான்று இணைக்க வேண்டும். விண்ணப்பதாரா்கள் சமுதாய நலனுக்காக தன்னாா்வத்துடன் தொண்டாற்றியிருக்க வேண்டும்.
மத்திய, மாநில அரசுகள், பொதுத்துறை நிறுவனங்கள், பல்கலைக்கழகங்கள், கல்லூரிகள் மற்றும் பள்ளிகளில் பணியாற்றுவோா் விண்ணப்பிக்க இயலாது. விண்ணப்பதாரருக்கு உள்ளூா் மக்களிடம் உள்ள செல்வாக்கு, விருதுக்கான பரிசீலனையில் கணக்கில் கொள்ளப்படும். மே 10 ஆம் தேதி மாலை 4 மணி வரை விண்ணப்பிக்கலாம்.
தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் ஜ்ஜ்ஜ்.ள்க்ஹற்.ற்ய்.ஞ்க்ஷஸ்.ண்ய் என்ற இணையதளம் மூலம் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும். மேலும் விவரங்களுக்கு மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞா் நலன் அலுவலரை 7401703516 என்னும் கைப்பேசியில் தொடா்பு கொள்ளலாம்.