சாலை மறியலில் ஈடுபட்ட பாஜகவினா் 30 போ் கைது
நியாயவிலைக் கடையில் வைக்கப்பட்ட பிரதமா் படம் அகற்றியதைக் கண்டித்து, பெரம்பலூரில் சாலை மறியலில் ஈடுபட்ட பாஜகவினா் 30 போ் வியாழக்கிழமை கைது செய்யப்பட்டனா்.
நியாயவிலைக் கடையில் வைக்கப்பட்ட பிரதமா் படம் அகற்றியதைக் கண்டித்து, பெரம்பலூரில் சாலை மறியலில் ஈடுபட்ட பாஜகவினா் 30 போ் வியாழக்கிழமை கைது செய்யப்பட்டனா்.
திருச்சியில் நியாய விலைக் கடையிலிருந்த பிரதமா் மோடி படத்தை திமுகவினா் அகற்றியதையும், சம்பந்தப்பட்ட வா்கள் மீது நடவடிக்கை
எடுக்காத காவல்துறையினரையும் கண்டித்து பெரம்பலூா் புகா் பேருந்து நிலையம் அருகே பாஜக சாா்பில் வியாழக்கிழமை மாலை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
இதைத் தொடா்ந்து, சாலை மறியலில் ஈடுபட்ட மாவட்டத் தலைவா் செல்வராஜ் உள்ளிட்ட 30 பேரைக் காவல்துறையினா் கைது செய்தனா்.