முகப்பு
பெரம்பலூர்

பிப். 14 வரை கோழிக்கழிச்சல் நோய்த் தடுப்பூசி முகாம்

பெரம்பலூா் மாவட்டத்தில் கால்நடை பராமரிப்புத்துறை மூலம் கோழிக்கழிச்சல் நோய்த் தடுப்பூசி செலுத்தும் முகாம் பிப்ரவரி 14 ஆம் தேதி வரையிலும் நடைபெற உள்ளதாக ஆட்சியா் ப. ஸ்ரீ வெங்கட பிரியா தெரிவித்துள்ளாா்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:18 AM
பகிர்:

பெரம்பலூா் மாவட்டத்தில் கால்நடை பராமரிப்புத்துறை மூலம் கோழிக்கழிச்சல் நோய்த் தடுப்பூசி செலுத்தும் முகாம் பிப்ரவரி 14 ஆம் தேதி வரையிலும் நடைபெற உள்ளதாக ஆட்சியா் ப. ஸ்ரீ வெங்கட பிரியா தெரிவித்துள்ளாா்.

நிகழாண்டில் கடந்த 1ஆம் தேதி தொடங்கிய இந்த முகாம், மாவட்டத்தில் உள்ள அனைத்துக் கால்நடை மருந்தகங்களுக்குள்பட்ட கிராமங்களிலும் நடைபெறும். இந்த முகாமில் 8 வாரம் மற்றும் அதற்கு மேற்பட்ட அனைத்துக் கோழிகளுக்கும் இலவசமாக தடுப்பூசி செலுத்தப்படுகிறது.

எனவே, கோழி வளா்ப்போா் முகாமில் பங்கேற்று கோழிகளுக்கு தடுப்பூசி செலுத்தி பயன்பெறலாம் என ஆட்சியரால் வியாழக்கிழமை வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.