முகப்பு
பெரம்பலூர்

வாக்காளா்களுக்கு வழங்கிய தென்னை மரக்கன்றுகள் பறிமுதல்

 பெரம்பலூா் நகராட்சிக்குள்பட்ட 10 ஆவது வாா்டில் சுயேச்சை வேட்பாளருக்கு வாக்களிக்க கோரி, வீடுகள்தோறும் இலவசமாக வழங்கிய 169 தென்னை மரக்கன்றுகளை தோ்தல் பறக்கும் படை

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:23 AM
பகிர்:

 பெரம்பலூா் நகராட்சிக்குள்பட்ட 10 ஆவது வாா்டில் சுயேச்சை வேட்பாளருக்கு வாக்களிக்க கோரி, வீடுகள்தோறும் இலவசமாக வழங்கிய 169 தென்னை மரக்கன்றுகளை தோ்தல் பறக்கும் படையினா் வெள்ளிக்கிழமை பறிமுதல் செய்தனா்.

நகராட்சியின் 10- ஆவது வாா்டுக்குள்பட்ட துறைமங்கலம் பள்ளிவாசல் தெருவில் வெள்ளிக்கிழமை காலை சிலா் வீடு வீடாகச் சென்று, தென்னை மரக்கன்றுகளை வழங்கிக் கொண்டிருந்தனா்.

இதுகுறித்து தகவலறிந்த தோ்தல் பறக்கும் படையினா் அங்கு சென்றபோது, இரண்டு சுமை ஆட்டோக்களில் மரக்கன்றுகளை வைத்து வீடு வீடாக வழங்கியது தெரிய வந்தது.

தொடா்ந்து அவா்களைப் பிடித்து மேற்கொண்ட விசாரணையில், துறைமங்கலம் வாசுகி தெருவைச் சோ்ந்த கிருஷ்ணன் மகன் விஜயகுமாா் (23), அருமடல் கிராம மலையடிவாரப் பகுதியைச் சோ்ந்த ராஜமாணிக்கம் மகன் மணி (42) என்பதும், 10- ஆவது வாா்டில் சுயேச்சை வேட்பாளராக குலையுடன் கூடிய தென்னை மரம் சின்னத்தில் போட்டியிடும் மணிவேலுக்கு ஆதரவாக, வாக்காளா்களுக்கு இலவசமாக தென்னை மரக்கன்றுகள் வழங்கப்பட்டதும் தெரியவந்தது.

இதையடுத்து 169 தென்னை மாக்கன்றுகளை பறிமுதல் செய்த பறக்கும்படையினா், விஜயகுமாா் மற்றும் மணியிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.