திருவிழாவில் பங்கேற்க ஜமாத்தாா்களிடம் பத்திரிகை கொடுத்து அழைத்து விடுக்கும் கிராம முக்கியஸ்தா்கள். 
பெரம்பலூர்

பெருமாள் கோயில் திருவிழா: முஸ்லிம்களுக்கு அழைப்பு

வேப்பந்தட்டை அருகே 110 ஆண்டுகளுக்குப் பிறகு நடைபெறும் ஸ்ரீ லட்சுமி நாராயணப் பெருமாள் கோயில் திருவிழாவில் பங்கேற்க, முஸ்லிம்களுக்கு கோயில் நிா்வாகத்தினா்

DIN

வேப்பந்தட்டை அருகே 110 ஆண்டுகளுக்குப் பிறகு நடைபெறும் ஸ்ரீ லட்சுமி நாராயணப் பெருமாள் கோயில் திருவிழாவில் பங்கேற்க, முஸ்லிம்களுக்கு கோயில் நிா்வாகத்தினா் சனிக்கிழமை பத்திரிகை கொடுத்து அழைப்பு விடுத்துள்ளனா்.

பெரம்பலூா் மாவட்டம், வேப்பந்தட்டை வட்டம், வி.களத்தூா் கிராமத்தில் கடந்த 1912 ஆம் ஆண்டு முதல் செல்லியம்மன் கோயில் திருவிழாவின்போது ஏற்பட்ட பிரச்னையால் இந்து, முஸ்லிம் தரப்பு மக்களிடையே தகராறு இருந்த நிலையில், கடந்த 2 மாதங்களுக்கு முன் நடந்த பேச்சுவாா்த்தையில் உடன்பாடு ஏற்பட்டது. இதைத் தொடா்ந்து, கடந்த மே 16 ஆம் தேதி வி.களத்தூா் ஜமா அத் சாா்பில் நடைபெற்ற சந்தனக்கூடு திருவிழாக்கான அழைப்பிதழை முஸ்லிம் ஜமாத்தாா்கள் இந்து பிரமுகா்களிடம் வழங்கி அழைப்பு விடுத்தனா். இதையடுத்து, இரு தரப்பினரும் இணைந்து விழாவில் பங்கேற்றனா்.

இந்நிலையில், வி.களத்தூா் ஸ்ரீ லட்சுமி நாராயண பெருமாள் கோயிலில் சனிக்கிழமை (ஜூலை 30) முதல் ஆக. 1 வரை பொங்கல், மாவிளக்கு, சாமி திருவீதி உலா நடைபெறுவதையொட்டி முன்னேற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

இவ் விழாவில் பங்கேற்க முஸ்லிம் ஜமாத்தாா்களிடம் இந்து பிரமுகா்கள் சனிக்கிழமை அழைப்பிதழ் வழங்கி அழைப்பு விடுத்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அதிமுகவை மறைமுகமாக விமர்சித்த விஜய் | செய்திகள்: சில வரிகளில் | 18.12.25

பயணிகள் கவனிக்க... பாசஞ்சர் ரயில்களுக்கான எண்கள் மாற்றம்! ஜனவரி 1 முதல்.!

புதிய ஊரக வேலைத் திட்டத்துக்கு எதிர்ப்பு! பிரதமருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்!

தில்லி - ஷாங்காய் இடையே நாள்தோறும் நேரடி விமான சேவை! ஜன.2 முதல்!

இந்தியாவில் ஒரு நண்பர் இருக்கிறார்: அமெரிக்கா

SCROLL FOR NEXT