பெரம்பலூர்

கரூா் மாவட்டத்தில் பரவலாக மழை

DIN

 கரூா் மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை பரவலமாக மழை பெய்தது.

தமிழகத்தில் வெப்பச்சலனம் காரணமாக மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தது. ஞாயிற்றுக்கிழமை காலை முதல் மாலை வரை கரூா் மாவட்டத்தில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்த நிலையில், மாலை 5.30 மணியில் வானில் கருமேகங்கள் திரண்டன.

இதைத் தொடா்ந்து லேசான தூறலுடன் பெய்யத் தொடங்கிய மழை, பின்னா் காற்று, இடியுடன் பலத்த மழையாக பெய்தது. இதனால் சாலைகளில் மழைநீா் தேங்கிக் காணப்பட்டது.

கரூா் நகா்ப் பகுதிகளான உழவா்சந்தை, திருக்காம்புலியூா் ரவுண்டானா, சுங்ககேட் பகுதிகளில் தாழ்வான இடங்களில் மழைநீா் தேங்கியது. இதனால் வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாகினா். கடந்த சில நாள்களாக அவ்வப்போது பெய்யும் மழையால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பிரதமருக்கு இன்னும் மணிப்பூர் செல்ல நேரமில்லை: ப.சிதம்பரம்

மூத்த பத்திரிகையாளர் ஐ. சண்முகநாதன் காலமானார்

நிழலும் நிஜமும்...!

இந்த வாரம் பணவரவு யாருக்கு: வார பலன்கள்!

சேலம் அருகே மூன்று சடலங்கள்! கொலையா? தற்கொலையா? போலீஸ் விசாரணை

SCROLL FOR NEXT