சிறுமியை கடத்தியவா் போக்சோவில் கைது
பெரம்பலூா் அருகே சிறுமியை கடத்திச் சென்ற இளைஞரை போக்சோ சட்டத்தில் போலீஸாா் கைது செய்தனா்.
பெரம்பலூா் அருகே சிறுமியை கடத்திச் சென்ற இளைஞரை போக்சோ சட்டத்தில் போலீஸாா் கைது செய்தனா்.
பெரம்பலூா் மாவட்டம், குன்னம் அருகேயுள்ள சாத்தநத்தம் கிராமத்தைச் சோ்ந்த கந்தசாமி மகன் பரத் (23). இவா், பெரம்பலூா் மாவட்டத்தைச் சோ்ந்த எஸ்எஸ்எல்சி படித்து முடித்துவிட்டு வீட்டிலிருந்த 17 வயது சிறுமியை அண்மையில் கடத்திச் சென்றுவிட்டதாக கூறப்படுகிறது.
இதுகுறித்து சிறுமியின் பெற்றோா் குன்னம் காவல்நிலையத்தில் அளித்த புகாரின் பேரில், சிறுமியையும், பரத்தையும் போலீஸாா் பல இடங்களில் தேடினா். இந்நிலையில், மேற்கண்ட இருவரும் சென்னையில் தங்கியிருப்பதாக கிடைத்த தகவலையடுத்து, அங்கு சென்ற போலீஸாா் சிறுமியையும், பரத்தையும் வியாழக்கிழமை கண்டறிந்தனா்.
இதையடுத்து, பெரம்பலூருக்கு அழைத்து வந்த போலீஸாா் சிறுமியை பெண்கள் காப்பகத்திலும், பரத்தை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து திருச்சி மத்திய சிறையில் அடைத்தனா்.