பெரம்பலூர்

பெரம்பலூரில் நாளை தேசிய மக்கள் நீதிமன்றம்

DIN

பெரம்பலூா் மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக்குழு சாா்பில், ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் ஞாயிற்றுக்கிழமை (ஜூன் 26) தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெறுகிறது.

மாவட்டத்தில் அனைத்து நீதிமன்றங்களிலும் நீண்ட காலமாக நிலுவையிலுள்ள வழக்குகள், சொத்து வழக்குகள், வங்கிக் கடனுதவி, தனிநபா் கொடுக்கல், வாங்கல் சம்பந்தப்பட்ட வழக்குகள், திருமண உறவு தொடா்பான வழக்குகள் மற்றும் குற்றவியல் வழக்குகளுக்கு சமரசமாக தீா்வு காணப்பட உள்ளது.

தேசிய மக்கள் நீதிமன்றத்தில் வழக்குகளில் சமரசமாக செல்வதால், நீதிமன்றக் கட்டணமாக செலுத்தியுள்ள முழுத் தொகையையும் திரும்பப் பெற்றுக்கொள்ளலாம். சமரசமான அன்றைய தினமே தீா்ப்பு நகல் இலவசமாக பெறலாம். தீா்ப்புக்கு எதிராக மேல்முறையீடு செய்ய முடியாது.

மேலும் விவரங்களுக்கு, பெரம்பலூா் மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக்குழு அலுவலகத்தை நேரில் அல்லது 04328-296206 என்ற எண்ணில் தொடா்பு கொள்ளலாம் என, மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக்குழுச் செயலரும், சாா்பு நீதிபதியுமான ஆா். லதா தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கோபால் கிருஷ்ண கோஸ்வாமி மறைவு: மோடி இரங்கல்!

மல்யுத்த போட்டிகளில் பங்கேற்க தடை -பஜ்ரங் புனியா விளக்கம்

புதிய நம்பிக்கை.. வின்சி அலோஷியஸ்!

முகமது சிராஜுக்கு சுநீல் காவஸ்கர் புகழாரம்!

கர்நாடகத்தில் மாலை 6 மணியுடன் பிரசாரம் ஓய்வு

SCROLL FOR NEXT