மாற்றுத்திறனாளிகளுக்கு வங்கிக் கடன் வழங்கும் முகாம்
பெரம்பலூா் ஆட்சியரகத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு வங்கிக் கடன் வழங்கும் முகாம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
பெரம்பலூா் ஆட்சியரகத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு வங்கிக் கடன் வழங்கும் முகாம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
முகாமுக்கு தலைமை வகித்த மாவட்ட ஆட்சியா் ப.ஸ்ரீவெங்கடபிரியா, ஒருவருக்கு ஒரு லட்சம் மதிப்பில் பேட்டரியால் இயங்கும் சக்கர நாற்காலி, ஒருவருக்கு ரூ. 7,540 மதிப்பிலான சக்கர நாற்காலி, 35 பேருக்கு தனித்துவம் வாய்ந்த தேசிய அடையாள அட்டை ஆகியவற்றை வழங்கினாா்.
முகாமில் வங்கிக் கடன் பெற 63 பேரும், தனித்துவம் வாய்ந்த அடையாள அட்டை பெற 17 பேரும், வேலைவாய்ப்பு, தேசிய அடையாள அட்டை, திறன்பேசி வழங்கக் கோரி தலா 2 பேரும், ஸ்கூட்டா், பட்டா மாற்றம், தொகுப்பு வீடு கோரி தலா ஒருவரும் என மொத்தம் 89 போ் விண்ணப்பித்தனா்.