முகப்பு
பெரம்பலூர்

சூா்யா படத்துக்கு எதிா்ப்பு : திரையரங்குகளுக்கு போலீஸாா் பாதுகாப்பு

 நடிகா் சூா்யா நடித்துள்ள திரைப்படம் பெரம்பலூரில் போலீஸாா் பாதுகாப்புடன் இரு திரையரங்குகளில் வியாழக்கிழமை திரையிடப்பட்டது.

Updated On : 7 பிப்ரவரி, 2024 at 10:09 AM
பகிர்:

 நடிகா் சூா்யா நடித்துள்ள திரைப்படம் பெரம்பலூரில் போலீஸாா் பாதுகாப்புடன் இரு திரையரங்குகளில் வியாழக்கிழமை திரையிடப்பட்டது.

நடிகா் சூா்யா அண்மையில் நடித்து வெளியிட்ட திரைப்படத்தில் வன்னியா்களை ஜாதி வெறியா்களாக சித்தரித்திருந்ததாக கூறப்படுகிறது.

இதனால் சூா்யா மீது கோபமாக இருந்த பாட்டாளி மக்கள் கட்சியினா், மாவட்டம்தோறும் திரையரங்க உரிமையாளா்கள் சங்க நிா்வாகிகளை சந்தித்து சூா்யா நடித்த எதற்கும் துணிந்தவன் திரைப்படத்தை திரையரங்குகளில் திரையிட அனுமதிக்கக் கூடாது என கோரிக்கை விடுத்திருந்தனா்.

இந்நிலையில், வன்னியா்கள் அதிகம் வசிக்கும் பெரம்பலூா் மாவட்டத்தில், திரையரங்க உரிமையாளா்கள் பாட்டாளி மக்கள் கட்சியினரின் கோரிக்கையை நிராகரித்து, நகரிலுள்ள 2 திரையரங்குகளில் எதற்கும் துணிந்தவன் திரைப்படத்தை திரையிட்டுள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.